பத்ரகாளி பிலிம்ஸ் தயாரிப்பில் நாகார்ஜூனா, அனுஷ்கா, பிரியாமணி ஆகியோர் நடிக்கும் படம் வம்பு. இது தெலுங்கில் வந்த ரகடா எனும் படத்தின் ரீமேக் ஆகும்.
சென்னையை மிகப்பெரிய தாதா கும்பல் ஒன்று ஆட்டிப்படைக்கிறது. ஒரு கட்டத்தில் கதாநாயகனின் அம்மாவை கொன்று விடுகிறது. தன் அம்மாவை கொன்ற அந்த தாதாவையும், அவர்களது சாம்ராஜ்யத்தையும் அழிக்கிறார் நாயகன். இதுதான் படத்தின் கதை.
படத்தின் ஆக்ஷன் கிங்காக நாகார்ஜூனாவும், நாயகியாக அனுஷ்காவும், பிரியாமணியும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சார்மி, பிரதீப் ராவத், கோட்டா சீனிவாசராவ், அவிஜாஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பத்ரகாளி பிலிம்ஸ் சார்பில் பிரசாத் ராவ், வெங்கட்ராவ் தயாரிக்க, வீறுபோட்லா இயக்குகிறார். தமன் இசையமைக்க, முராரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.