முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவாகி வரும் படம் நீயின்றி நான் இல்லை. நீண்ட காலத்துக்கு முன்பு முதல்வர் கருணாநிதி எழுதிய சுருளிமலை என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்படுகிறது. நாயகனாக உதய்கிரண் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மீராஜாஸ்மின் நடிக்கிறார்.
படத்தில் வன அதிகாரியாக உதய்கிரண் நடிக்கிறார். நடிகை தூத்துக்குடி
கார்த்திகா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நடிகை மனோரமா நீதிபதியாக
நடிக்கிறார். படத்தை இளவேனில் இயக்குகிறார். இவர்தான் ஏற்கனவே கலைஞரின்
கதை-வசனத்தில் உளியின் ஓசை படத்தினை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறுமுகனேரி எஸ்.பி.முருகேசன் தயாரிக்கிறார்.