கின்னஸ் சாதனைக்காக பன்னிரெண்டே தினங்களில் எடுத்தப் படம் சுரேஷ் ஜோஹிம்மின் சிவப்பு மழை.
58 கின்னஸ் சாதனைகளை படைத்த சுரேஷ் ஜோகிம்மின் 59வது முயற்சிதான் சிவப்பு மழை படம். படத்தின் கதை முதற்கொண்டு பாடல்கள், படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்சன், சென்சார், பட ரிலீஸ் என அனைத்தையும் பன்னிரெண்டே தினங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார் சுரேஷ் ஜோகிம்.
கடந்த 1990 ம் ஆண்டு இங்கிலாந்தில் 13 நாளில் தயாரான "த ஃபாஸ்டஸ்ட் பார்வர்டு' என்ற படமே குறுகிய நாளில் தயாராகி கின்னஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த சாதனையை "சிவப்பு மழை' முறியடித்துள்ளது. படத்தின் நாயகனாக சுரேஷ் ஜோஹிமும், நாயகியாக மீரா ஜாஸ்மினும் நடித்துள்ளனர். விவேக், சுமன், ராஜீவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
"சிவப்பு மழை' படத்தை வி.கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். எஸ்.இந்திரஜித், ஜாமலுதீன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தேவா இசையமைத்துள்ளார். பாடல்கள் வைரமுத்து, தயாரிப்பு இ.ஜான்.