அசோக்
புதுமுகம் முருகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அசோக். பிடிச்சிருக்கு, கோழிகூவுது, வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய், காதல் சொல்ல ஆசை, உலா, உள்பட பல படங்களில் நடித்தார். எந்தப் படமும் அசோக்கிற்கு கைகொடுக்கவில்லை. இவர் நடித்த வானம் பார்த்த சீமையிலே படம் வெளியாகவில்லை. தற்போது கண்ணகிபுரம் சந்திப்பு, ப்ரியமுடன் ப்ரியா படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் கா கா கா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ராமகிருஷ்ணனும், மகேஸ்வரி என்ற புதுமுகமும் நடிக்கிறார்கள். வெற்றிமாறன் உதவியாளர் மனோன் இயக்குகிறார். அம்ரித் இசை அமைக்கிறார், சரவணன் நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
"காக்கா பிடித்தே காரியம் சாதிப்பவர்கள் ரொம்ப ஆபத்தானவாகள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை காதல் கலந்து காமெடியாக சொல்லும் படம். காகம் எழுப்பும் கா கா கா என்கிற ஒலி உறவுகளையும் ஒன்றிணைக்கவும் ஆபத்தின் அறிகுறியை உணர்த்தவும் பயன்படுத்துகிறது. இந்த இரண்டு அம்சங்களும் படத்தில் இருப்பதால் கா கா கா என்றே தலைப்பு வைத்துள்ளளோம் என்கிறார் இயக்குனர்