பிங்கி புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் பியாரிலால், K.குந்தேச்சா அதிக பொருட்ச்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “ஜெயிக்கிற குதிர” என்று பெயரிட்டுள்ளனர்.
லொள்ளு, நக்கல், நையாண்டி காமெடிகளுக்கு பேர் பெற்றவர் ஷக்தி சிதம்பரம் இவரும் சத்தியராஜும் இணைந்து பல வெற்றிப் படங்களை படைத்திருக்கிறார்கள். அத்துடன்
பிரபு, பிரபுதேவா, பார்த்திபன், சுந்தர்.சி, சிபிராஜ், லாரன்ஸ்,கருணாஸ் என நிறைய நடிகர்களை வைத்து பல படங்களை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். இவரது பாணி சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெயிக்கிறகுதிர படத்தில் கதாநாயகனாக ஜீவன் நடிக்கிறார். சில வருட இடைவெளிக்கு பிறகு ஜீவன் நடிக்கும் படம் இது. கதாநாயகிகளாக மூன்று பேர்... டிம்பிள்சோப்டே, அம்பிகாசோனி, திராவியா நடிக்கிறார்கள். மற்றும் சரண்யா, ஜெயபிரகாஷ்,கருணாகரன், தம்பிராமையா, ஜி.ஆர், கோவைசரளா, சிங்கம்புலி, மயில்சாமி, இமான்அண்ணாச்சி, மதுமிதா, சித்ராலட்சுமணன் இவர்களுடன் பவர்ஸ்டார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு-ஆஞ்சநேயலு, இசை - கவின், பாடல்கள் - வைரமுத்து, மதன்கார்க்கி, எடிட்டிங் - ரஞ்சித், கலை - ஆர்.கே.விஜய்முருகன், நடனம் - தினேஷ், ஸ்டன்ட் -தளபதி தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.எம்.சேகர், இணை இயக்கம் - அண்ணாதுரை கண்ணதாசன், காமராஜ். தயாரிப்பு - பியாரிலால் K.குந்தேச்சா, எழுதி இயக்குபவர் ஷக்திசிதம்பரம்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.... முடியாது என்பது முட்டாள்தனம். முடியும் என்பது மூலதனம் என்கிற ஆறு வார்த்தைகள் தான் கதைக் களம். இதை வைத்து காமெடி, காதல்,கலாட்டா படமாக உருவாகிறது. 21ம் தேதி படப்பிடிப்புடன் துவக்க விழா நடைபெற்று தொடர்ந்து அறுபது நாட்களில் படப்பிடிப்பு முடிவடைகிறது. சென்னை, பாண்டி, மும்பை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார்.