சாந்தினி மண்ணின் மணம் சார்ந்த படங்களுக்கு என்றுமே ஒரு அபரிமிதமான வரவேற்பு உத்திரவாதம். மெயின் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் என்னும் புதிய பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் போர் குதிரை மதுரையை அடுத்துள்ள உசிலம்பட்டியின் கலாசாரத்தை சுற்றி பின்னப் பட்ட கதை. போர்குதிரை இந்த மண்ணின் மணத்துக்கும் , குணத்துக்கும் ஒரு தனித்துவம் உண்டு.என்னுடைய கதை அந்த மண்ணின் மைந்தர்களின் பழக்கங்களையும் உணர்வுகளையும் படம் பிடித்து காட்டும்.இவர்களுக்கென இருக்கும் ஒரு உத்வேகமான போர்குணமே போர் குதிரை படத்துக்கு அடித்தளம் என்கிறார் இயக்குனர் பிரவீன் . இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் போர் குதிரை படப்பிடிப்பு குழுவினரின் எண்ணத்துக்கும் செயலுக்கும் ஏற்ப தரமான படம் என்று பெயர் எடுக்கும் என நம்ப படுகிறது.