பளபளப்பாக இருக்கும் ஐ.டி நிறுவனங்களுக்கு பின்னால் இருக்கும் இன்னொரு பக்கத்தை காட்டும் படம் ஒன்றை புதுமுக இளைஞர் சந்தோஷ் தயாரித்து நடிக்கிறார். படத்தின் பெயர் மாலுமி. இதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சுவாதி ஷண்முகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
கடற்கரை குப்பத்தை ஒட்டிய பகுதியில் பிரமாண்ட ஐ.டி நிறுவனம் ஒன்று இருக்கிறது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. அதை எதிர்த்து போரிட முடியாத இளைஞர்கள் குப்பத்து இளைஞர்களின் உதவியை நாடுகிறார்கள். ஐ.டி. இளைஞர்கள் திட்டம்போட்டுக் கொடுக்க அதை குப்பத்து இளைஞர்கள் செயல்படுத்திக் கொடுக்கிறார்கள். இப்படி போகுது கதை.
"பேராசையால் குறுக்கு வழியில் செல்லும் வெளிநாட்டு ஐ.டி நிறுவனங்கள். நம் நாட்டு இளைஞர்களை மனதளவிலும், உடல் அளவிலும் டார்ச்சர் செய்து அவர்களை கசக்கிப் பிழிகிறது. இந்த உண்மைமையை படமாக எடுக்கிறோம் என்கிறார்" இயக்குனர் சிவகுமார். பாஸ்கர் மியூசிக். கவுதம் முத்துசாமி கேமரா மேன்.