பிரமிட் சாய்மீரா நிறுவனம் வழங்க தெய்வானை மூவிஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் வானம் பார்த்த சீமையிலே. முருகா படத்தில் ஹீரோவாக நடிக்க அசோக்தான் இந்த படத்தின் நாயகன். அவருக்கு ஜோடியாக வெயில் படத்தின் உருகுதே உருகுதே பாடல் நாயகி பிரியங்கா நடிக்கிறார். இவர்கள் தவிர சரண்யா, விஜயகுமார், கஞ்சாகருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஜேப்பி.அழகர் இயக்குகிறார்.
வீரம் என்றால் என்ன? உண்மையான வீரன் யார்? என்பதை முற்றிலும் கிராமியப் பின்னணியில் சொல்வதுதான் வானம் பார்த்த சீமையிலே படத்தின் கதையாம். காரைக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் அசோக் இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். இயல்பான காட்சிகள், இனிமையான பாடல்களோடு படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்களாம்.
இசை - ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள் - நந்தலாலா, பழனிபாரதி, ஜேப்பி.அழகர், ஜோமல்லூரி. ஒளிப்பதிவு - செந்தில்குமார். கலை -மோகன். படத்தொகுப்பு - வி.டி.விஜயன். தயாரிப்பு - அமுதா துரைராஜ்.
- தினமலர் சினி டீம் -