நந்தினி வழங்கும் ஸ்ரீ லக்ஷ்மிஜோதி கிரியேசன்ஸ் பட நிறுவனம் ஏற்கனவே தமிழில் பிசினஸ்மேன், டைகர் விஷ்வா போன்ற படங்களையும், மலையாளத்தில் அதூர்ஷ், நாயக் போன்ற படங்களையும் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் சார்பாக ஏ.என்.பாலாஜி, கோவிந்தராஜ் இருவரும் இணைந்து, தெலுங்கில் ‘‘பெஜவாடு’’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் ‘‘விக்ரம் தாதா’’ என்ற பெயரில் தயாரிக்கின்றனர்.
இதில் நாகசைதன்யா கதாநாயகனாகவும் அமலாபால் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கோட்டா சீனிவாசராவ், அஜெய், அபிமன்யூசிங், முகுல்தேவ், சுபலேகா சுதாகர், அகுதிபிரசாத், சத்யபிரகாஷ், பிரமானந்தம், அஞ்சனா சகானி, எம்.எஸ்.நாராயண் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மிகப்பெரிய புள்ளியின் வலதுகரமாக திகழும் ஒருவன் சந்தர்ப்பவசத்தால் குற்றவாளியாக்கப்படுகிறான். அவனை மீட்டெடுக்கும் தம்பியின் ஆக்ஷன் படம்தான் ‘‘விக்ரம் தாதா’’. நாகசைதன்யா மிகப்பெரிய ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கும் படம் இது. இப்படத்தில் அமலாபால் கிளாமர் வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு கார்கோ, ஜெயமுரசு, சுதந்திரதாஸ், உவரி க.சுகுமாரன் பாடல்கள் எழுத, அல்மொகிலே, பிரதீப் கொனேரு, பிரேம் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். ஏ.ஆர்.கே.ராஜராஜ் வசனம் எழுதி தமிழாக்கம் பொறுப்பேற்றிருக்கிறார். விவேக் கிருஷ்ணா இயக்கத்தில் எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.என்.பாலாஜி தயாரிக்கிறார்.