ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
சீரியலில் வில்லி நடிகையாக நடித்து வந்த நிவிஷா தற்போது கதாநாயகியாக நடிக்க உள்ளார். சின்னத்திரையில் தெய்வமகள், முள்ளும் மலரும், ஓவியா, சிவகாமி, ஈரமான ரோஜாவே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவிஷா. சீரியலில் இவர் நடித்த வில்லி கதாபாத்திரம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் புடவைகளில் போடும் போட்டோஷூட்களுக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. புடவையில் செதுக்கி வைத்த சிலை போல் இருக்கும் இவரை பார்த்து ரசிகர்கள் தங்கள் காதலை கொட்டித்தீர்ப்பார்கள்.
இந்நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அம்மன் தொடரில் நடித்து வந்த நடிகை சீரியலை விட்டு விலக, அதில் அம்மனாக (கதாநாயகியாக) நிவிஷா நடிக்கிறார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட நிவிஷாவுக்கு ரசிகர்கள் 'ஒரு சிலை அம்மனாக மாறுகிறது' என கமெண்டுகளுடன் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.