'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் எங்க வீட்டு மீனாட்சி. இதில் பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீதா சிவதாஸ், ஜீவா உள்பட பலர் நடிக்கிறார்கள். இது காரைக்குடி செட்டிநாட்டு கூட்டு குடும்பத்தின் கதை. இந்த குடும்பத்தின் தலைவியாக வள்ளியம்மாள் என்ற கேரக்டரில் பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார். மீனாட்சி என்கிற டைட்டில் கேரக்டரில் நடிகை ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார். அவரது ஜோடியாக சிதம்பரம் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது. வருகிற 18ம் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த தொடரில் நடிப்பது குறித்து பூர்ணிமா பாக்யராஜ் கூறியதாவது: முதல் முறையாக கலர்ஸ் தமிழோடு இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு புத்துணர்ச்சியூட்டும் கதைக்களத்தில், திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்க வீட்டு மீனாட்சி தொடரில் நான் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் எனது நடிப்பை பார்வையாளர்கள் நிச்சயம் ரசிப்பதோடு எங்களுடன் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன். என்கிறார்.