உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு | டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி |
மாஸ்டர் படத்தையடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடம் பூஜா ஹெக்டே, டைரக்டர் செல்வராகவன், யோகி பாபு உள்பட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஏற்கனவே பீஸ்ட் படத்தின் இரண்டு விதமான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில் அடுத்து தீபாவளி அன்று பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.