நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
விஷால் நடிப்பில் ஆர்யா இணைந்து நடிக்கும் “எதிரி” படத்தின் வெளியீட்டு பணிகள் நடந்து வருகின்றன. அடுத்தப்படியாக து.பா. சரவணனன் இயக்கும் படத்தில் நடித்து, தயாரித்து வருகிறார் விஷால். டிம்பிள் ஹயாதி நாயகியாக அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்என்ஆர் மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஷாலின் 31வது படமாக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் 10 நாட்கள் இறுதி கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகிறது.