ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் சமூக சேவை நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
திரையுலகத்தில் உள்ள சோனு சூட், சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்ட நடிகர்கள் சிலர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
'கேஜிஎப் 2, சலார்' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்களான ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தினர் மாண்டியாவில் 2 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களையும், 20 ஆக்சிஜன் படுக்கை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்கள். மேலும் 'சலார்' படக்குழுவினர் 150 பேருக்கு தலா 5000 ரூபாய் வழங்கியுள்ளார்கள். மேலும், தெலுங்கு பிலிம் சேம்பர் உறுப்பினர்கள் 3200 பேருக்காக 35 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் இப்படியான உதவிகளைச் செய்து கொடுத்ததாக ஒரு தகவல் கூட இதுவரை வெளிவரவில்லை. பெப்ஸி சங்கத்திற்கு மட்டும் அஜித், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் நிவாரண உதவிகளை அளித்துள்ளனர்.
கடந்த வருடம் முதல் அலை வந்த போது கிடைத்த உதவிகளை விட இந்த முறை உதவிகள் குறைவாகவே கிடைத்துள்ளன. பெப்ஸி சார்பில் 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தும் கூட தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் உதவி செய்ய முன் வராதது ஏன் என்று தெரியவில்லை.