சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் சுல்தான் படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதும் படத்தின் வசூல் திருப்திகரமாக உள்ளது. தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்நிலையில் இணையதளத்தில் கார்த்தி, ராஷ்மிகா ரசிகர்கள் உடன் கலந்துரையாடினர். அப்போது பொன்னியின் செல்வன் படம் பற்றி கார்த்தியிடம் கேள்வி கேட்டார் ராஷ்மிகா.
அதற்கு, ‛‛பொன்னியின் செல்வன் இரண்டு பகாங்களாக வெளிவர உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. 60 ஆண்டுகாலமாக இதை படமாக்க தமிழ் சினிமா முயற்சித்து வந்தது. ஆனால் அது இப்போது தான் நடந்துள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் என பலரும் நடித்துள்ளோம். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா பிரச்னையால் படப்பிடிப்பு தாமதமாகிறது. 2022ல் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார் கார்த்தி.