Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திகில் முதல் காமெடி வரை.... வரிசைக் கட்டும் ஓடிடி ரிலீஸ்...!

21 மே, 2026 - 02:38 IST
எழுத்தின் அளவு:
From-horror-to-comedy....a-queue-building-OTT-release...!
Advertisement


வாரா வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை விட ஓடிடியில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரசிகர்களின் வரவேற்பால், ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு புதுப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்த வாரம் வெளியாகும் படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

வாரண்ட்

இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் பிரசாத் பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் 'வாரண்ட்'. இந்த தொடரின் முதல் சீசன் நாளை (மே.22ம் தேதி) ஜீ5யில் வெளியாகவுள்ளது.

மேமு கோபுலம் (Memu Copulam)

தெலுங்கு இயக்குநர் பிரதீப் மடலி இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி வெப் தொடர் 'மேமு கோபுலம் (Memu Copulam)'. காணாமல் போன சேவலைக் கண்டுபிடிக்கும் போது ஏற்படும் சம்பவங்கள் நகைச்சுவையாகச் சொல்லும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடர் நாளை (மே.22ம் தேதி) ஜீ5யில் வெளியாகவுள்ளது.

மதுவிது (Madhuvidu)

அறிமுக இயக்குநர் விஷ்ணு அரவிந்த் இயக்கத்தில் நடிகை கல்யாணி பணிக்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள ரொமான்டிக் மலையாள திரைப்படம் 'மதுவிது (Madhuvidu)'. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நாளை(மே.22ம் தேதி) சோனி லைவ்வில் வெளியாகவுள்ளது.

பீஷ்மர் (Bhishmar)

மலையாள இயக்குநர் ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் இயக்கத்தில் தயான் ஸ்ரீனிவாசன், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'பீஷ்மர்( Bhishmar)'. இந்த படம் நாளை (மே.22ம் தேதி) அமேசான் ப்ரைம், சன் நெக்ஸ்ட்டில் ரிலீசாகவுள்ளது.

ஷேஷா 2016(Shesha 2016)

கன்னட இயக்குநர் பிரதீப் அர்சிகேரே இயக்கத்தில் சித்தார்த் சிவா, டேன் டேவிஸ், பிரமோத் ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஷேஷா 2016(Shesha 2016)'. இந்த படம் கன்னடம், மலையாளம் மொழிகளில் சன் நெக்ஸ்ட்டில் நாளை (மே.22ம் தேதி) வெளியாகவுள்ளது.

சதி லீலாவதி(Sathi Leelavathi)

தெலுங்கு இயக்குநர் ததினேனி சத்யா இயக்கத்தில் லாவண்யா திரிபாதி, தேவ் மோகன், விகே நரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்' சதி லீலாவதி(Sathi Leelavathi)'. இந்த படம் நேற்று (மே.20ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் ரிலீசாகியுள்ளது.

சாத்தான் தி டார்க் (Satan The Dark)

இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் வெளிவந்துள்ள த்ரில்லர் திரைப்படம் ' சாத்தான் தி டார்க் (Satan The Dark)'. இந்த திரைப்படத்தில் ஃபிரெட்ரிக் ஜான் (எஃப்.ஜே), ஐரா பாலக், மற்றும் சாந்தினி தமிழரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று (மே.20ம் தேதி) அமேசான் ப்ரைம், ஆஹா தமிழ் மற்றும் டென்ட் கொட்டாவில் ரிலீசாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛ஏழு கடல் ஏழு மலை' படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம்‛ஏழு கடல் ஏழு மலை' படத்தில் ஏ.ஐ ... ஆகஸ்ட் மாதம் துவங்கும் மணிரத்னம், விஜய் சேதுபதி படம் ஆகஸ்ட் மாதம் துவங்கும் மணிரத்னம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap