மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

விஜய் நடித்த கடைசி படம் என்று சொல்லப்படும் ஜனநாயகன் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே நெட்டில் லீக் ஆனது படக்குழுவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பாக, படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் மிரண்டு போய் இருக்கிறது. 500 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கூறப்படுவதால் அவர்கள் கதி கலங்கி போய் இருக்கிறார்கள்.
விரைவில் ஜனநாயகன் படத்துக்கு முறைப்படி சென்சார் சான்றிதழ் கிடைத்து, தேர்தல் முடிந்தபின் ரிலீஸ் ஆனாலும், எத்தனைபேர் படத்தை பார்ப்பார்கள். எந்த மாதிரியான வரவேற்பை பெறும் என யாராலும் கணிக்க முடியவில்லை. இதனால், தியேட்டர் உரிமையாளர்கள், படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் 'நாங்க ரிஸ்க் எடுக்க முடியாது' என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்களாம். நாங்க கொடுத்த பணத்தை திருப்பி தாருங்க. படம் எப்படி ஓடுகிறதோ, அதை பொறுத்து நாம சதவீத அடிப்படையில் வருமானத்தை பிரித்துக்கொள்வோம் என்று கண்டிசன் போடப்போகிறார்களாம். இதனால், தயாரிப்பாளருக்கு கடுமையான பாதிப்பு.
இதற்கிடையில், தயாரிப்பாளர் நிலைமையை உணர்ந்து அவர்களிடம் விஜய் பேசி இருக்கிறார். உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதற்கு நானே பொறுப்பு. நான் அரசியலுக்கு வந்ததால் இவ்வளவு பிரச்னைகள். தேர்தல் வேலைகள் முடிந்தவுடன் நாம பேசுவோம். அடுத்த திட்டம் குறித்து யோசிப்போம் என்று ஆறுதல் கூறியிருக்கிறாராம்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், மீண்டும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு ஒரு படம் பண்ணி தருவது ஹீரோக்களின் வாடிக்கை. அந்தவகையில் விஜய் மீண்டும் நடிக்கப்போகிறார். கேவிஎன் பட நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட அந்த படத்தில் சம்பளம் வாங்காமல் அல்லது சம்பளம் குறைவாக வாங்கி அல்லது வேறு வகை ஒப்பந்தத்தில் நடிக்க வாய்ப்பு என்கிறார்கள் கோலிவுட்டில்.
அந்த படம் மாஸ்டர்2 அல்லது லியோ 2வாக இருக்க வாய்ப்பு. அந்த படத்தை விஜய்க்கு பிடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கலாம். அடுத்து விஜயின் மனநிலை, தேர்தல் ரிசல்ட்டை பொறுத்து அவர் சிரஞ்சீவி பாணியில் தொடர்ந்து நடிக்கலாம், அந்த படங்களை அட்லி, நெல்சன் போன்ற விஜய்க்கு நெருக்கமானவர்கள் இயக்க வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் கட்சி வேறு மாதிரியான வெற்றியை பெற்றால், அவர் நடிக்க மாட்டார். ஜனநாயகன் படத்தயாரிப்பாளருக்கு வேறுவகையில் ஈடு கட்டுவார் என்று பேசப்படுகிறது.