அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

நடிகர் பிரசாந்த் நடித்து வெளிவந்த 'அந்தகன்' படம் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து பிரசாந்த்தின் 55வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார் என கடந்த ஆண்டு பிரசாந்த் பிறந்தநாள் அன்று அறிவிப்பு வெளியானது. இதன்மூலம் கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த், ஹரி இணைந்தனர்.
இந்த படத்தின் அறிவிப்புக்கு பிறகு வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால் பிரசாந்த் நடிப்பில் ‛ரஞ்சன்' என்ற படம் உருவாவதாக கடந்தவாரம் அறிவிப்பு வந்தது. இது தெலுங்கில் வெளியான கோர்ட் படத்தின் ரீ-மேக் ஆகும். இந்த பட அறிவிப்பு வந்ததால் பிரசாந்த் - ஹரி படம் டிராப் ஆனதாக தகவல் வெளியானது.
இதுபற்றி விசாரித்தபோது, ஹரி கூட்டணியில் உருவாகும் படத்தின் பட்ஜெட் பெரிது. மேலும் வெளிநாடுகளில் எல்லாம் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம். அதற்கான படப்பிடிப்பு நாட்களும் அதிகம் என்பதால் அதற்கு முன்பாக கோர்ட் பட ரீ-மேக்கை முடித்துவிடலாம் என பிரசாந்த் தந்தை தியாகராஜன் கூறி உள்ளார். இதனால் கோர்ட் ரீமேக்கான ரஞ்சன் படம் முடிந்தபிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி படம் துவங்கும் என்றனர்.