பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் | பிளாஷ்பேக்: திரைப்படக் கல்லூரி மாணவர்கள் திரையில் ஏற்படுத்திய புரட்சி “ஊமை விழிகள்” | ரிக்ஷாக்காரன், நட்புக்காக, பூஜை - ஞாயிறு திரைப்படங்கள் | நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் |
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'பராசக்தி'. 1965 காலகட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்து இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க 2000 ஆரம்ப காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்த அப்பாஸ், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 11 வருடங்களுக்கு பிறகு அப்பாஸ் மீண்டும் படங்களில் நடிப்பதை தொடங்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் படத்தை தொடர்ந்து தற்போது ‛பராசக்தி' படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.