எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள ‛தக் லைப்' படம் ஜுன் 5ல் ரிலீஸாகிறது. இப்பட இசை வெளியீட்டு விழாவில் ‛‛தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது'' என கமல் பேசினார். இது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்த அங்கு படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கமல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியுள்ளார்.
இதனால் கர்நாடகாவில் தக் லைப் படத்தை திரையிட மாட்டோம் என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தெரிவித்தது. இதனிடையே கோர்ட் மூலம் படத்தை வெளியிட கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கமல். ஆனால் கமலுக்கு எதிராக நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதோடு அவர் மன்னிப்பு கேட்க மதியம் 2:30 மணிவரை கெடு விதித்தது.
இப்பிரச்னை தொடர்பாக கர்நாடகா வர்த்தக சபைக்கு கமல் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‛‛தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அன்பின் மிகுதியால் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். கன்னட மொழியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை.
தமிழைப் போலவே, கன்னடமும் ஒரு பெருமைமிக்க இலக்கிய மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தைக் கொண்டது. அதை நான் எப்போதும் பாராட்டியே வந்திருக்கிறேன். எனக்கு மொழியால் அன்பு உண்டு. எனக்கு மொழிகள் உடனான பிணைப்பு ஆழமானது. எந்த மொழியையும் தாழ்த்தி பார்க்கும் எண்ணம் இல்லை. எனது பேச்சு அனைவரையும் ஒருங்கிணைக்கவும், அன்பையும் ஒற்றுமையையும் நிலைநாட்டவும் மட்டுமே இருந்தது.
திரைப்படம் மக்களிடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக் கூடாது. இதுவே எனது பேச்சின் உண்மையான நோக்கம். பொது அமைதியின்மை மற்றும் பகைமைக்கு எந்த இடத்தையும் நான் ஒருபோதும் அளிக்க விரும்பவில்லை. இந்த தவறான புரிதல் தற்காலிகமானது. நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
கமலுக்கு என்ன ஈகோ
இந்த கடிதத்தை மதியம் 2:30 மணிக்கு நடைபெற்ற விசாரணையின்போது கமல் தரப்பில் சமர்பிக்கப்பட்டது. இதனை படித்த நீதிபதி, ''கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை. தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்காமல் கமல் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறார்? மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ? கன்னட மக்களின் உணர்வுகளை கமல் குறைத்து மதிப்பிடுகிறார். பிரச்னையின் தீவிரத்தை அவர் உணர வேண்டும்; படத்தை விட இந்தியாவின் ஒற்றுமையே பெரிது'' என்றார்.
ரிலீஸ் ஒத்திவைப்பு
இதனையடுத்து, கமல் தரப்பில், ''கர்நாடகாவில் மட்டும் தக்லைப் படம் ரிலீஸ் செய்வது தள்ளிவைக்கப்படுகிறது'' எனக் கூறப்பட்டது. பட ரிலீஸை தள்ளிவைத்ததை அடுத்து, வழக்கையும் நீதிபதி ஒத்திவைத்தார்.