புஷ்பா பட இயக்குனருடன் இணையும் ராம்சரண் | அல்லு அர்ஜுனின் மனைவி வெளியிட்ட வீடியோவை பகிர்ந்து சமந்தா போட்ட பதிவு | சரோஜினி சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் குஷ்பூ! | சூர்யா 45-ல் இணைந்த இரண்டு பிரபலங்கள் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அல்லு அர்ஜுன் கைது மூலம் புஷ்பா 2 வசூலுக்கு உதவி செய்த முதல்வர் : ராம் கோபால் வர்மா கிண்டல் | கொஞ்சம் சீரியஸா இருங்க : பஹத் பாசிலையும் ஜோதிர்மயியையும் சத்தம் போட்ட இயக்குனர் | மோகன்லாலை இயக்கும் ஆவேசம் பட இயக்குனர் | யார் கல்லெறிந்தாலும் கவலை இல்லை, கடவுள் எனக்கு பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார் - நடிகர் திலீப் | கூண்டோடு விலகிய நடிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து மெகா நிகழ்ச்சி நடத்தும் சுரேஷ் கோபி | ‛குட் பேட் அக்லி' படப்பிடிப்பை முடித்த அஜித் : ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி |
நாயகி, அம்மா, அக்கா அண்ணி, பாட்டி என எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதில் கச்சிதமாக பொருந்துகிறவர் லட்சுமி. அதிலும் அம்மா வயதில் இருக்கும்போது இளமை நாயகியாகவும், இளமையாக இருக்கும்போது அம்மாவாவும் நடித்து சாதித்தவர்.
குமாரி ருக்மணி என்ற நடிகைக்கும், ஏரகுடிப்பட்டி வரதராவ் என்ற இயக்குனருக்கும் பிறந்தவர் லட்சுமி. திரை பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால், சினிமாவில் நுழைவது அவருக்கு எளிதாக இருந்தது. 9 வயதிலேயே 1961ம் ஆண்டு இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா இயக்கிய 'ஸ்ரீவள்ளி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக லட்சுமி நடித்தார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்த வரை எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ஹீரோயினாக நடிக்க தொடங்கும்போதுதான் பிரச்னை. அம்மாவைபோல அழகாக இல்லை என்றார்கள். நடிக்கத் தெரியவில்லை என்றார்கள். ஓட்டலில் கிளப் டான்ஸ் ஆடப்போகலாம் என்றார்கள். ஆனால் இந்த விமர்சனங்கள் தான் லட்சுமியை மிகப்பெரிய நடிகை ஆக்கியது. இல்லாவிட்டால் அவர் பெற்றோரின் ஆசைக்காக ஒரு சில படங்களில் நடித்து விட்டு போலீஸ் அதிகாரி ஆவதுதான் அவரது நோக்கமாக இருந்தது.
ஆனால் அவர் குறித்த விமர்சனங்கள் அவரை 3 தேசிய விருதுகள், 3 நந்தி விருது மற்றும் பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியது. 300 படங்களுக்கு மேல் நடித்தும் 70 வயதை தாண்டியும் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சொந்த வாழ்க்கையிலும் லட்சுமி துணிச்சலானவர். 17 வயதில் பெற்றவர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டவர் தனது முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தால் அவரிடமிருந்து விலகினார். பின்னர் ஒரு காதல் அவருக்கு வந்தது. அவர் தன்னை ஒரு நடிகையாக மட்டும் பார்த்ததால் அவரையும் தூக்கி எறிந்தார். தன்னை மனதார நேசித்த, ஒரு சாதாரண நடிகரை மணந்து கொண்டார்.
லட்சுமிக்கு இன்று 72 வயது நிறைவடைகிறது.