ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர் ஜெயம் ரவி, அகிலன், இறைவன், சைரன், பிரதர் என தொடர் தோல்வி படங்களை தந்து ரசிகர்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளார். தற்போது இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'காதலிக்க நேரமில்லை' என்கிற படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் லால், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முழு நீள காதல் படமாக உருவாகும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது .இந்த நிலையில் இத்திரைப்படத்தை வருகின்ற டிசம்பர் 20ம் தேதி கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதே தேதியில் விடுதலை 2ம் பாகம் திரைக்கு வருகிறது.