தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

விக்ரம் ஸ்ரீதரன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பெர்த் மார்க். இந்தப் படத்தில் ‛டான்சிங் ரோஸ்' புகழ் சபீர், மிர்னா மேனன், இந்திரஜித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 1990களில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இயற்கையோடு கலந்த வாழ்வு என்று பேசும் சிலர் மருத்துவமனையை தவிர்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதை ஊக்குவிக்கிறார்கள். நவீன அலோபதி மருத்துவம் மனித குலத்திற்கு எதிரானது என்ற கண்ணோட்டம் அவர்களிடம் இருந்து வருகிறது. அதோடு இயற்கையான பிரசவத்தை மருத்துவமனைகளில் தங்களின் பேராசை காரணமாக சிசேரியனாக மாற்றுகின்றனர் என்பது போன்ற விஷயங்களை முன் வைத்து இந்த பெர்த் மார்க் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தில் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.