ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மூன்று படங்கள் மட்டுமே இயக்கிய நெல்சன் திலீப்குமாருக்கு முதல் இரண்டு படங்களின் வெற்றி தான் இந்த ஜெயிலர் பட வாய்ப்பை பெற்றுத் தந்தது. ஆனால் அவரது மூன்றாவது படமான பீஸ்ட், ஜெயிலர் அறிவிப்புக்கு பின் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பு அவரது கையை விட்டுப் போகவில்லை. படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது பீஸ்ட் படத்திற்கு சரியான வரவேற்பு இல்லை என்பதால் நெல்சன் திலீப்குமாரை மாற்றலாம் என பலரும் கூறினார்கள். ஆனாலும் அவர்தான் இயக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன். இந்த படத்தின் கதையை சொல்வதற்காக காலை 10 மணிக்கு வருமாறு நெல்சனுக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருந்தேன். ஆனால் அவர் நான் நீண்ட நேரம் தூங்குபவன் என்பதால், 11.30 மணிக்கு வருகிறேன் என்று கூறினார். ஆனாலும் அவர் 12 மணிக்கு தான் எனது வீட்டிற்கு வந்தார். அதன்பிறகு படத்தின் ஒரு வரி கதையை கூறினார். பத்து நாட்கள் கழித்து வந்து முழு கதையையும் சொன்னார். ரொம்பவே பிடித்திருந்தது. படத்தை துவங்கி விட்டோம்' என்று கூறினார்.
அந்த வகையில் ரஜினியின் பட வாய்ப்பு கிடைப்பதற்கு உறுதியாவதற்கு முன்பே, பங்சுவாலிட்டி விசயத்தில் பெயர் போன ரஜினிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் நெல்சன் திலீப் குமார்.