இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

வேலன் புரொடஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் 'வெப்' . அறிமுக இயகுனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். 'நான் கடவுள்' ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் நடிகர் நட்டி பேசும்போது, “எங்களுக்கு சம்பளத்துடன் ஜிஎஸ்டியும் சேர்த்து கொடுத்த தயாரிப்பாளர்களில் வெப் படத்தின் தயாரிப்பாளரும் ஒருவர். இயக்குனர் ஹாரூன் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும்போதே அவர் வேலை தெரிந்தவர்தான் என்பது தெரிந்து விட்டது. இப்போதைய சூழலில் பல பேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவை ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம் தான் இந்த 'வெப்'," என்று கூறினார்.