'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை | நடிகர் விஸ்வக் சென் வீட்டில் வைர நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருட்டு |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தற்போது தமிழில் அவர் நடித்த அயலான் படம் விரைவில் வெளியாகிறது. கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ரகுல் பிரீத் சிங் கலந்து கொண்டார். அதில் உண்மையான காதல் எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி அவர் அளித்த பதில், "காதலுக்கு எந்தவித எல்லையும், நிபந்தனைகளும் இருக்காது. நீங்கள் ஒருவரோடு உண்மையான காதலில் இருந்தால் அப்போது நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும்.ஒருவர் மீது ஒருவர் மதிப்பு உடன் இருக்க வேண்டும். ஆனால் ,இந்த காலத்தில் ஒரு சிலர் காதலை தவறாக பயன்படுத்துகின்றனர். எதையோ காதல் என்று நினைத்துக்கொள்கின்றனர். காதலித்தவரை வளரவிடாமல் தனக்கு பிடித்ததை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர்.அதனால் தான் இந்த காலகட்டத்தில் காதல் உறவுகள் நீண்ட காலம் நிலைக்காமல் முறிந்து விடுகின்றன. காதலுக்குள் பொய்க்கு இடம் இல்லை நல்ல நண்பர்களுக்கு இடையில் எப்படி ஒளிவு மறைவில்லாமல் இருக்கிறோமோ அதே போல் காதலிலும் இருக்க வேண்டும். பொய்யை சொல்வது அதனை மறைக்க முயற்சி செய்வது போன்றவை ஏமாற்றுவதற்கு சமம்".
இவ்வாறு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.