அட்லீ - பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | கடைசி கட்ட ஓட்டத்தில் 'வாரிசு, துணிவு' | விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் - அடுத்தடுத்து வந்த அப்டேட்கள் | ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை | திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல் | குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் | அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு | திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் |
உலக சினிமா ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 'அவதார் - த வே ஆப் வாட்டர்' படத்தின் டிரைலர் நேற்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. அடுத்த மாதம் டிசம்பர் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்தியாவில் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் வசூல் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் பெற்ற வசூலை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை வந்த ஹாலிவுட் படங்களில் 'அவஞ்சர்ஸ் என்ட் கேம்' ரூ.400 கோடிக்கு அதிகமான வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. 'அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' ரூ.300 கோடியை நெருங்கியுள்ளது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியான 'அவதார்' படத்தின் முதல் பாகம் ஐந்தே வாரங்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்து மொத்த ஓட்டத்தில் சுமார் ரூ.130 கோடி வரை வசூலைக் குவித்து, முதன் முதலில் அதிக வசூலைப் பெற்ற ஹாலிவுட் படம் என்ற பெருமையைப் பெற்றது. அந்த சாதனையை இதுவரையில் ஆறே ஆறு ஹாலிவுட் படங்கள்தான் முறியடித்துள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகப் போகிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி அதிக வசூலைக் குவித்த முதல் ஹாலிவுட் படம் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியதோ அது போல 'அவதார் 2' படம் ரூ.500 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தும் என இந்திய பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் நம்புகின்றன. 'அவதார் 2' வெளிவருவதால் பல இந்தியத் திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.