2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தமிழில் ‛வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரிலும் தயாராகி வருகிறது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் இரண்டு சண்டை காட்சிகள் தவிர அனைத்து படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அதோடு இந்த படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொங்களுக்கு திரைக்கு வரும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதை மீண்டும் வலியுறுத்தி இப்படம் கண்டிப்பாக 2023 ஜனவரியில் பொங்கலுக்கு திரைக்கு வந்துவிடும் என்று ஒரு செய்தி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதோடு அன்றைய தினம் தமிழகத்தில் அஜித்தின் துணிவு படம் வெளியாக உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடப்படும் அதேநாள் தெலுங்கில் சங்கராந்தி பண்டிகை என்பதால் தெலுங்கில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படமும் திரைக்கு வருகிறது. அதனால் விஜய்யின் வாரிசு படமும், பிரபாஸின் ஆதி புருசும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன.