Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்கா சென்றார் டி.ராஜேந்தர் : மகன் சிம்பு குறித்து நெகிழ்ந்து கண்ணீர் பேட்டி

15 ஜூன், 2022 - 10:40 IST
எழுத்தின் அளவு:
T-Rajendar-fly-to-US-for-treatment

தமிழ் சினிமாவின் அஷ்டவதானி என்று அழைக்கப்படுகிறவர் டி.ராஜேந்தர். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக வெள்ளி விழா படங்களை கொடுத்தவர். அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் டி.ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது வயிற்று பகுதியில் ஏற்படும் ரத்தகசிவு பிரச்சினைக்காக வெளிநாட்டுக்கு சிகிக்சைக்கு செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பே அவரது மகன் சிம்பு அமெரிக்கா சென்று தந்தையின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டார். திட்டமிட்டபடி. நேற்று அவரது அமெரிக்கா புறப்பட்டு சென்றார் டி.ராஜேந்தர். அவருடன் மனைவி உஷா உடன் சென்றார். முன்னதாக அவர் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: இப்போது நான் உயர் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறேன். நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. அதற்குள் அமெரிக்கா சென்றுவிட்டேன் என பல கதைகளை எழுதி விட்டனர். யார் என்ன எழுதினாலும் விதியை மீறி எதுவும் நடக்காது. முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை சந்தித்து ஆறுதல் கூறி அன்பை காட்டி பாசம் காட்டி தோள் தட்டி நம்பிக்கை ஊட்டியதை மறக்க முடியாது.என்னை பற்றி எந்த வதந்திகள் வந்தாலும் நம்ப வேண்டாம். நான் மேல் சிகிச்சைக்காக சென்று மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன். நான் வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதற்கான காரணம் எனது மகன் சிலம்பரசன் தான். அவன் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் நான் ஒப்புக்கொண்டேன். அவனது படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு தாய், தந்தைக்காக 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான். என் மகனை நான் மன்மதனாக மட்டும் வளர்க்கவில்லை. மரியாதை தெரிந்தவனாகவும் வளர்த்துள்ளேன். சிம்பு படத்தில் வல்லவன் நிஜத்தில் நல்லவன். பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் என் மகன் பெற்றோர்களுக்காக கடின உழைப்பு செய்து வருகிறார். இப்படி ஒரு மகனை பெற்றதற்கும், குருவாக இருந்து ஒரு நல்ல சிஷ்யனை உருவாக்கியதற்கும் நான் பெருமைப்படுகிறேன். பாக்கியமாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.கமல் நலம் விசாரிப்பு
முன்னதாக டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக அவரை நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி 169வது படத்தில் இளம் வயது ரஜினியாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!ரஜினி 169வது படத்தில் இளம் வயது ... விக்ரம் வெற்றி : முதல்வரை சந்தித்தார் கமல்ஹாசன் விக்ரம் வெற்றி : முதல்வரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

magan - london,யுனைடெட் கிங்டம்
15 ஜூன், 2022 - 16:40 Report Abuse
magan What to surprise Not only simbu every children have a responsibility to look after thir parents
Rate this:
15 ஜூன், 2022 - 14:54 Report Abuse
அப்புசாமி எல்லா கூத்தாடி பின்னாலேயும் நாலு மீடியா ஆளுங்க...
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
15 ஜூன், 2022 - 14:37 Report Abuse
Vena Suna அவர் போய் விட்டார் என்றெல்லாம் அபத்தமாக பொய் செய்திகள் போட்ட ஊடகங்களை அனுமதித்த யூடுயுப் தடை செய்யப்பட வேண்டும்.
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
15 ஜூன், 2022 - 13:55 Report Abuse
KayD TR வெளிநாடு புறப்படும் முன் விமான நிலையத்தில் பேசிய பேச்சை நிறைய பேர் கேட்டு இருப்பாங்க. நம் patience ஐ தான் இந்த patient sodhithu ரணகளம் ஆக்கி விட்டார்... பாவம் American doctors இனி ..உங்க thothathil பேரிக்காநான் vandhaachi அமெரிக்கா nu pesiyae kolla poraar
Rate this:
15 ஜூன், 2022 - 13:29 Report Abuse
kulandai kannan இதெல்லாம் ஒரு செய்தி.....
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Na Na
  • நா நா
  • நடிகர் : சசிகுமார் ,
  • இயக்குனர் :NV நிர்மல்குமார்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in