'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்., 13ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக் ஷன் கலந்த படமாக உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் ராவில் பணியாற்றும் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தில் இருந்து இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் படத்தின் டீசர் அல்லது டிரைலர் எப்போது வெளியாகும் என இயக்குனர் நெல்சனிடம் ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதற்கு இன்று அப்டேட் வரும் என கூறியிருந்தார் நெல்சன். இந்நிலையில் அவர் சொன்னதுபடியே ஏப்., 2ல் மாலை 6மணிக்கு பீஸ்ட் பட டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதன் உடன் ‛‛நம்ம ஆட்டம் இனிமே வேற மாதிரி இருக்கும்'' என பதிவிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான போஸ்டரில் விஜய் போர் விமானத்தில் பறப்பது போன்று வெளியிட்டுள்ளனர். இவை எல்லாமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.