ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் | சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா | அசீமிற்கு விருந்து கொடுத்த வனிதா | என் மீது பொய்வழக்கு : நித்யா பேட்டி |
பன்முக ஆளுமையான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் அற்புதமான முயற்சியில் உருவான படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. தேசிய விருது பெற்ற இந்த படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கி இருந்தார். மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களின் நடுவர்களில் கவனத்தை ஈர்த்தது. தற்போது இந்த படம் ஹிந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்க ரீ-மேக் செய்து வருகிறார் பார்த்திபன்.
இந்நிலையில் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படம் இந்தோனேசியாவில் பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதை PT பால்கன் நவீன் தயாரிக்கிறார். இந்தோனேசியாவில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்த் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர பார்த்திபனின் லட்சிய திரைப்படமான 'இரவின் நிழல்' படத்தில் பணிபுரிந்து வருகிறார். இது ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படமாக உருவாகி வருகிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அதோடு படத்தில் மூன்று பாடல்களையும் எழுதியுள்ளார் பார்த்திபன்.