விமர்சனம்
அ நிறம் | அளவு
கொச்சியை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளரான ரஜித் மேனன், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை என்ற மலை கிராமத்துக்கு பணி நிமித்தமாக செல்கிறார். அங்கே சூழ்நிலை காரணமாக திருமணமானவரான இளம்பெண் நக் ஷா சரண் வீட்டில் தங்குகிறார். அங்கே சில சம்பவங்கள் நடக்கின்றன. கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் அவரை பார்க்க, அதே கிராமம் வருகிறார். அந்த வீடும் இல்லை, அந்த கிராமமும் இல்லை. அவர் சந்தித்த மனிதர்களும் இல்லை. எல்லாமே மாறியிருக்கிறது. நீ பைத்தியம், நீ சொன்ன சம்பவம் நடக்கவே இல்லை என ஊர்மக்கள் சொல்கிறார்கள். அப்போது அந்த ஊர் பெரியவரான ராம்ஸ் மூலமாக, பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கே நடந்த ஒரு சம்பவம் தெரிய வருகிறது. அங்கே இருந்த ஒரு கிராமம் அழிந்ததை உணர்கிறார். அவருக்கு அப்படிப்பட்ட காட்சிகள் ஏன் தெரிந்தன. முந்தைய கதையில் ரஜித் மேனன் யார்? அந்த கிராமத்தில் அடைக்கலமான இளம் காதல் ஜோடிகளுக்கு என்ன நடந்தது? இதுதான் சிட்டுக்குறிஞ்சி கதை
ஒரு தைப்பூசம் நன்னாளில் வத்தலகுண்டுவில் இருந்து பூம்பாறை என்ற மலை கிராமத்துக்கு, அழகான முருகன் பாடலை ஒலிக்கவிட்டு ஒரு பஸ் கிளம்புவதில் இருந்து படம் தொடங்குகிறது. அந்த கிராமத்து வீட்டில் ரஜித் மேனன், நக் ஷா சரண் இடையேயான காட்சிகள் நாகரீகமாக நகர்கின்றன. மீண்டும் அதே பஸ்சில் ஹீரோ வர, அந்த கிராமமே இல்லை என்ற அதிர்ச்சி களத்துடன் கதை, இன்னொரு தளத்துக்கு நகர்கிறது. ஹீரோவின் கிராம தேடல். பிளாஷ்பேக் காட்சிகள், அதில் சொல்லப்படும் காதல், காதலர்களுக்கு நடந்த கொடுமை, கடைசியில் அந்த கதைக்கும், இந்த கதைக்கும் சம்பந்தம் என பேண்டஸி கலந்த ஒரு காதல் கதையை சிட்டுக்குறிஞ்சியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ஹீரோ ரஜித் மேனன் அமைதியாக நடித்து இருக்கிறார். கதைப்படி மலையாளியாகவே காண்பிக்கப்படுவதால் அவரின் மலையாளம் கலந்த தமிழை ஏற்றுக் கொள்ளலாம். கிராமத்தை காணாமல் அவர் தவிப்பது, தான் சொல்வது உண்மை என நிரூபிக்க துடிப்பது நல்ல சீன்கள், பிளாஷ்பேக்சீனில் காதலனாக வருகிறார். அவர் நண்பராக வரும் விஜே பப்பு மலையாளியாக முதற்பாதியில் கலகலப்பூட்டுகிறார். கதையில் 2 ஹீரோயின்கள் முதலில் அந்த கிராமத்து வீட்டில் வசிப்பராக வரும் நக் ஷா சரண் வசீகரமாக இருக்கிறார். பிளாஷ்பேக்கில் காதலியாக வரும் தீப்ஷிகா கியூட். கிராமத்து பெரியவராக வரும் ஜி.எம்.குமார், அவரில் ஊரில் வசிக்கும் ராம்ஸ் ஆகியோர் கொஞ்சம் அதிகமாகவே நடித்து இருக்கிறார்கள்.
இது பேய் கதையா? காதல் கதையா? திரில்லர் ஜானரா என ஆரம்பத்தில் சந்தேகம் வரும் அளவுக்கு திரைக்கதையில் சுவாரஸ்யம் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். அந்த கிராமம், அந்த வீடு, அந்த மக்களின் நடப்பு படத்துக்கு பிளஸ். ஹீரோவுக்கு என்னாச்சு? அங்கே என்ன நடந்தது என்ற தவிப்பு கதையை ரசிக்க வைக்கிறது. ஆனால், அடுத்த பாதி காதல் கதை வழக்கமான படமாகி விடுகிறது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி, அதற்கு முந்தைய சோக காட்சிகளில் அவ்வளவு சினிமாதனம். மாறாவின் இசையில் அந்த கல்யாண பாட்டு இதம். காடு, பஸ், கிராமம், பிளாஷ்பேக் சீன்களில் ஒளிப்பதிவாளர் ரசனை தெரிகிறது. அந்த கிராமத்தை உருவாக்கியதில் கலை இயக்குனர் ராம்ஜி உழைப்பு தெரிகிறது.
ஒரு காதல் கதையை, மாறுபட்ட கோணத்தில் கொஞ்சம் சுற்றி வளைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். அந்த மென்மையான பாணி, சஸ்பென்ஸ், திருப்பங்கள் ஓகே. ஓபனிங் நல்லாதான் இருக்குது. ஆனால், அடுத்து குழப்பம், கடைசியில் வழக்கமான காதல், சண்டை என படம் முடிந்துவிடுவது ஏமாற்றம். இரண்டாம் பாதியில் இன்னும் புதுமை இருந்தால் படம் பேசப்பட்டு இருக்கும்.
சிட்டுக்குறிஞ்சி - பேண்டசி கலந்து சொல்லப்பட்ட ஆணவக்கொலை!

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…