விமர்சனம்
அ நிறம் | அளவு
போலீஸ் ஆக ஆசைப்படும் ஹீரோ லியோ சிவகுமார் சூழ்நிலை காரணமாக, கோவையில் டெலிவரி பாய் ஆக இருக்கிறார். தான் திருடிய பணத்தை துஷ்யந்திடம் கொடுக்க அடிக்கடி சென்னை வருகிறார். அது ஏன்? 6 பேர் கொண்ட ஒரு கும்பல் துஷ்யந்த்தை கொல்ல நினைக்கிறது? அது ஏன்? அதை தடுத்தாரா ஹீரோ? கடைசியில் போலீஸ் ஆனாரா? என்பது டெலிவரி பாய் கதை. புதுமுகம் நானி இயக்கி இருக்கிறார்
கோவையில் இட்லிகடை வைத்திருக்கும் ராதிகா மகனான லியோ சிவகுமார் புட் லிவரி பாய் ஆக இருப்பது, பக்கத்து ஏரியாவில் வசிக்கும் பிரிகிடாவை காதலிப்பது என சாதாரணமாக கதை தொடங்குகிறது. சென்னையில் தாதா மாதேஸ்வரன் ஒயின்ஷாப் பாரில் வேலை செய்து கொண்டே கொடூர கூலிப்படையாக இருக்கும் பாட்டில் கேங் என்ற 7 இளைஞர்கள் கொண்ட கும்பல் பற்றி கதையும் இன்னொரு பக்கம் விரிகிறது. தான் திருடிய பணத்தை துஷ்யத்திடம் கொடுக்க சென்னைக்கு ஹீரோ சந்திக்க வர, வேகமெடுக்கிறது. காதல், காமெடி, ஆக் ஷன், நட்பு, விசுவாசம் கலந்து ஒரு கமர்ஷியல் கதையை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
இதுவரை நடித்த படங்களை விட இதில் நடிப்பிலும், ஆக் ஷனிலும் தேறியிருக்கிறார் லியோ சிவகுமார். அவரின் காதல், பாசம், நட்பு, சண்டைக்காட்சிகள் கதையுடன் ஒன்றி இருக்கிறது. பாடல், ஆக் ஷன் காட்சிகளில் அவரும் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்ஸ் பைட் அமர்களம். அவரின் காதலியாக சில சீன்களில் வருகிறார் பிரிகிடா. அந்த காட்சிகள், சாங் ஓகே. ஆனால், ஹீரோயினை இடைவேளைக்குபின் இயக்குனர் கண்ணில் காண்பிக்கவில்லை
பாட்டில் கேங் என்ற கும்பலை சேர்ந்த 7 இளைஞர்கள், அவர்கள் பின்னணி டெரர். அவர்களின் நட்பு, கோபம், சண்டைக்காட்சிகள் விறுவிறு. ஒயின்ஷாப் ஓனராக வரும் மாதேஸ்வரனுக்கும் நல்ல கேரக்டர். அவர் நடிப்பு, அந்த கேரக்டரின் தன்மை, கிளைமாக்ஸ் சண்டையும் செட்டாகி இருக்கிறது. இவர்களை தவிர, அப்பார்ட்மென்ட் வாட்ச்மேனாக வரும் காளி வெங்கட்டுக்கும் வலுவான சீன் இருக்கிறது. துஷ்யந்த் நண்பர்கள், ஹீரோ நண்பராக வரும் ஜென்சின் திவகாரும் போராடிக்கவில்லை. வழக்கமான அம்மாவாக வந்து பாசத்தை பொழிகிறார் ராதிகா.
கோவையில் இயல்பாக ஆரம்பிக்கும் கதை, சென்னையில் பக்கா ஆக் ஷனுடன் முடிகிறது. காதல் தவிர, இடையிடையே சென்டிமென்ட், நட்பு காட்சிகளை வைத்து, டுவிட்ஸ்ட் சேர்த்து அருமையான திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். எதற்காக ஹீரோ அடிக்கடி சென்னை வருகிறார். அவருக்கும் துஷ்யந்துக்குமான பந்தம் ஆகியவை டச்சிங். ஒரு பாடல்காட்சி, பின்னணியில் இசையில் நிறைவான பங்களிப்பை தந்து இருக்கிறார் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி, பிரசன்னா ஒளிப்பதிவிலும் குறைவில்லை.
குறிப்பாக, அந்த நண்பர்கள் 7 நண்பர்களின் அவரின் அட்டகாசம், கொலை செய்யும் பாணி, அவர்களின் ஆக் ரோஷம் கதைக்கு பிளஸ் ஆக இருக்கிறது. போலீசாக வரும் போஸ் வெங்கட்டும் மனதில் நிற்கிறார். இவர்களுக்கும், ஹீரோவுக்கு நேரடி பகை இல்லாவிட்டாலும், சூழ்நிலை காரணமாக மோதுவதும், நட்புக்காக ஹீரோ துணை நிற்பதும் மாஸ் சீன்கள். இடைவேளைக்குபின் கொஞ்சம் போரடிக்கிறது. சில குறைகள் இருந்தாலும் ஓவர் ஹீரோயிசம், பில்டப் இல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு மாறுபட்ட ஆக் ஷன் கதையை சொல்லியிருப்பதில் இயக்குனர் தேறியிருக்கிறார். பைட்மாஸ்டர் பீனிக்ஸ் பிரபுவின் அந்த கிளைமாக்ஸ் பைட் விறுவிறுப்பு. ஆக் ஷன் ஹீரோ மாதிரி அதை சிறப்பாக செய்து இருக்கிறார் ஹீரோ லியோ சிவகுமார்.
இடைவேளைக்குபின் ஒரு வித பாசிட்டிவிட்டி பீலிங் கதையில் வருகிறது. முதற்பாதியை விட, அடுத்த பாதியில் விறுவிறுப்பு அதிகம். மற்றவர்களுக்கு நீங்க இக்கட்டான நேரத்தில் உதவினால், உங்களுக்கு அவர்கள் சரியான நேரத்தில் உதவுவார்கள். எந்த பிரதிபலனையும் பார்க்காமல் உதவுவது இன்னும் சூப்பர் என சில சம்பவங்கள், சில நபர்களுடன் படத்தை முடித்து ஒரு பொருத்தமான திருக்குறளையும் சொல்கிறார் இயக்குனர். அந்த சீனும், அந்த கருவும் மனதை தொடுகிறது.
டெலிவரி பாய் - நீங்க உதவினால், உங்களுக்கும் உதவுவார்கள் என்கிற கரு நச்

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…