விமர்சனம்
அ நிறம் | அளவு
நம் வாழ்க்கையில் எத்தனையோ தடவை கேட்ட கதைதான், எத்தனையோ புத்தகங்களில் படித்த விஷயங்கள்தான். எத்தனையோ படங்களில் பார்த்த தெய்வீக கதாபாத்திரங்கள்தான். ஆனாலும், ராமாயணம் எப்போதும் சலிக்கவே சலிக்காது. ஒவ்வொருமுறை புது விஷயத்தை கற்றுக்கொண்டுக்கும், ஒவ்வொருமுறையும் புது ஆன்மிக சிந்தனைக்குள் கொண்டு சென்று பக்தி உணர்வை வளர்க்கும். இந்தமுறை மிகப்பிரமாண்டமாக 3டியில் வந்துள்ளது ராமாயணா. இரண்டு பாகங்கள் சேர்ந்து 4 ஆயிரம் கோடி செலவில் உருவாகி உள்ளது. முதற்பாகம் தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான தியேட்டரில் வெளியாகி உள்ளது.
சரி, இந்த முறை நிதேஷ்திவாரி ராமாயணத்தை எப்படி காண்பிக்கிறார் என உட்கார்ந்தால் ஆரம்பத்தில் ராவணன் வளர்ச்சி, அவனின் போர், மூவுலகின் அதிபதியாக மாறுவதை முதலில் காண்பிக்கிறார். அந்த சண்டைக்காட்சிகள், ராவணனின் வீரம், கோபம் வியக்க வைக்கிறது. அடுத்து ராமன் பிறப்பு, வளர்ப்பு என கொஞ்ச நேரம் கதை செல்கிறது. விஸ்வமித்ரர் தனது யாகத்தை காக்க, ராமனை அழைக்க தசரதன் அவைக்கு வந்து பேச, ராமராக ரன்பீர் கபூர் கம்பீரமாக அறிமுகம் ஆகிறார். அதிலிருந்து காட்டில் தாடகை, சுபாகு என்ற அரக்கர்கள் வதம், மிதிலை சுயம்வரம், சீதையுடன் திருமணம், பரசுராமர் என்ட்ரி, கைகேயி கோபம், ராமர் வனவாசம் செல்வது, அங்கு நடக்கும் சண்டைகள், கடைசியில் சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்தி செல்ல, என் சீதையை மீட்பேன் என ராமர் சபதம் செய்வதுடன் முதற்பாகம் முடிகிறது. மீதி கதை அடுத்த படத்தில், அடுத்த தீபாவளிக்கு..
ராமாயணக் கதையை சொல்லும் ஒவ்வொரு இயக்குனரும், ஒவ்வொரு விஷயத்தில் தனி கவனம் செலுத்துவார்கள். இந்த கதையில் இயக்குனர் நிதேஷ் திவாரி உலகளாவிய நவீன டெக்னாலாலஜியுடன், உலக ரசிகர்களுக்கு, பிரமாண்டமாக ராமாயணத்தை சொல்ல நினைத்து இருக்கிறார். யெஸ், இந்த படம் 3டியில் வந்துள்ளது.
ராமராக நடித்த ரன்பீர்கபூர் முகத்தில் அப்படியொரு தேஜஸ், அழகான உடல்வாகு. அவ்வளவு பணிவு, பேச்சில் நிதானம். அதேசமயம், வில் எடுத்து சண்டைபோடும்போது ஆக்ரோஷமாகிவிடுகிறார். ஒவ்வொரு கோணத்தில் அவர் அம்புகளை சரம், சரமாக பாயவிடும் அழகே தனி. சீதையுடனான காதல் காட்சி, கைகேயியுடனான பாசக்காட்சி, தம்பி லட்சுமணனை கண்டிப்பது, சூர்ப்பனைக்கு புத்திமதி சொல்வது, அரக்கர்கள், அவர்களின் படையினரை பந்தாடுவது என சீனுக்கு சீன் ரசிக்க வைக்கிறார். இளவரசர் கோலம், காட்டில் வனவாச கோலம் என இரண்டிலும் மிளிர்கிறார். கிளைமாக்சில் சீதைக்காக நான் எதையும் செய்வேன் என சினத்துடன் பேசும் டயலாக்கும் அருமை. மற்ற ராமாயணத்தைவிட, இதில் ராமன் கேரக்டர் சண்டைக்காட்சி, சாகசத்தை 3டியில் பார்ப்பது தனித்தன்மையாக இருக்கிறது.
சீதையாக நடித்த சாய் பல்லவி அமைதியின் உருவமாக அவ்வளவு அழகாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவரை வந்த ராமாயணங்களில் சீதை கதாபாத்திரம் சண்டை காட்சிகளில் நடித்ததில்லை. இந்த ராமாயணத்தில் ராம லட்சுமணர்களுடன் சேர்ந்து சீதையும் அரக்கர்களுடன் சண்டை போடுவது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கிறது. அவரின் உடை மற்றும் நகை அலங்காரங்களுக்கு தனித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவருக்கான வசன காட்சிகள், நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் குறைவுதான்.
லட்சுமணராக வரும் துபே அவ்வப்போது காமெடி பண்ணுகிறார். இதுவும் இந்த ராமாயணத்தில் புதுமை. அருண் கோவில் தசரராக கைகேயியாக லாராதத்தா சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். வில்லியாக வரும் ரகுல் ப்ரீத் சிங், கவர்ச்சிகரமான அழகான வில்லி. அவரின் வில்லத்தனத்தில், ராமரை ஒருதலையாக காதலிப்பதில் ஒருவித ஸ்டைல்னஸ் தெரிகிறது. ராவணன் மனைவியாக வரும் மண்டோதரிக்கு நிறைய காட்சிகள் இல்லை காஜல் அகர்வால் அந்த கேரக்டரில் வருகிறார். ஜடாயுவுக்கு கதையில் முக்கிய பங்கு. ராவணனுடன் சண்டையிடும் காட்சியில் அந்த கேரக்டர் கோபம், வீரம் சபாஷ். இந்த அளவுக்கு ஜடாயு சண்டையை வேறு எதிலும் பிரமாண்டமாக காண்பித்தது இல்லை.
படத்தில் நடிப்பில் மிரட்டியது என்றால் ராவணனாக நடித்த யஷ்தான். இந்திரனுடன் போர், மற்ற அரசர்களை கொடூரமாக வீழ்த்துவது என சண்டைக்காட்சிகளில் ரணகளம் செய்து இருக்கிறார். குறிப்பாக, ராமரை எதிர்க்கலாமா என 10 தலையுடன் மாறுபட்ட மாடுலேஷனில் அவர் நடிப்பது அட்டகாசம், முதற்பாகத்தில் ராமன், ராவணன் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் இல்லை. ஆனாலும், ராவணன் நடிப்பு, கெட்அப்பில் மனதில் நிற்கிறார்.
இந்த 3டி ராமாயணத்தின் பெரிய வெற்றி நவீன பாணியிலான திரைக்கதையும், விஷூவல் காட்சியும், வியக்க வகை்கும் பிரமாண்டமும் தான். ராவணனுடைய போர், காட்டில் ராம, லட்சுமணர் செய்யும் அசுரவதம், சீதை சுயம்வரம், அயோத்தி அழகு, ராமன் வனவாசம் செல்லுதல், சூர்ப்பநகை, அவர் அணியுடன் சண்டை, புஷ்ப விமானத்தில் சீதை கடத்திச் செல்லுதல், ராவணன் ஜடாயு மோதல் ஆகியவை மிகப் பிரமாண்டமான விஷூவல் சீன்களாக வந்துள்ளது. இந்த சீன்களில் ஒருவித அழகியல், கிராபிக்ஸ் வொர்க், செட் வொர்க்கின் உச்சம் தெரிகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இது கவரும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பிரமாண்டமும் சிஜி ஒர்க்கும் படத்திற்கு பக்காவாக செட் ஆகியுள்ளது, மேலும் தமிழ் டப்பிங் ஆக இருந்தாலும் எந்த இடத்திலும் இந்தி சாயல் இல்லை . ஏஐ பயன்படுத்தி, லிப்சிங் தமிழ் வசன உச்சரிப்புக்கு அதீத அக்கறை செலுத்தியுள்ளது படத்தின் பிளஸ்.
ஏ.ஆர்.ரஹ்மானும், ஜிம்மரும் பின்னணி இசையில் தனி அனுபவத்தை தருகிறார்கள். சில கருவிகளின் இசை சில இடங்கள் உலகளாவிய சினிமா அனுபவத்தை தருகின்றன. சமஸ்கிருத மந்திரங்கள், ஸ்லோகங்கள் பல இடங்களில் பொருத்தமாக அமைந்து இருக்கின்றன. ஆனாலும், பாடல் காட்சிகளில் அழகியல் இருக்கும் அளவுக்கு தெய்வீக தன்மை, அந்த வார்த்தைகள், அந்த கம்பீரம் இல்லை. ராமர் படத்தில் ராம் என்று முணுமுணுக்கும் பாடல் இல்லை. டிஎன்இஜி மற்றும் பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் பாபன் அடகலே ரமேஷ் அந்தாலே, ஸ்வப்னில் தவ்டே, ரூடா தவுபுரே மற்றும் நிகில் ஷன்பாக் உள்ளிட்ட பல முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் சி.ஜி, ஆர்ட் டைரக்டஷனில் பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களுக்கு பல விருதுகள் நிச்சயம். ராமாயண காலத்திற்குள் நம்மை அழைத்து சென்று ஆச்சரியமூட்டுகிறார்கள். ஒளிப்பதிவு இயக்குனர்கள் பணியும் செம. ஒடிசியை ஹாலிவுட் படமாக எடுத்தது போல, ராமாயணம் என்ற இதிகாசத்தை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக மிகப் பிரமாண்டமாக கொடுத்து பார்வையாளர்களை ஈர்த்து எழுதத்தில் இயக்குனர் இதே நிதேஷ் திவாரி.
படத்தின் நீளம் சற்று அதிகம் மூனேகால் மணி நேரம் ஓடுகிறது அதை குறைதீர்க்கலாம். சில சென்டிமென்ட் எமோஷன் காட்சிகளின் நீளத்தை சுருக்கி இருக்கலாம் ராமாயணம் என்றால் நமக்கு தேவர்கள், அரக்கர், போர் சாகச காட்சிகள் சண்டையும் நினைவுக்கு வரும் அதை அதிகரித்து இருக்கலாம் முதல் பாகம் என்பதால் முன் கதையை சொல்லி, மீதியை இரண்டாம் பாகத்தில் வைத்திருப்பார்கள் போல. இன்றைய இளம் தலைமுறையினர், மற்ற நாட்டு ரசிகர்களும் ராமாயணத்தை புரிந்து வியக்கும்வகையில் 3டியில் விஷூவல் விருந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
ராமாயணா - காண கண் கோடி வேணும்

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…