விமர்சனம்
அஜய் தேவ்கன், சிவாய் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். எரிக்காவுடனான காதல் காட்சிகளில் ஆகட்டும், மகளை தொலைத்து பரிதவிக்கும் இடங்களிலாகட்டும், எதிரிகளை பந்தாடுவதிலாகட்டும் அனைத்திலும் ஜொலிக்கிறார்.
எரிக்கா கார், சாயிஷா ஷெகல் என இரண்டு ஹீரோயின்கள், இருவரும் தங்களை ரோலை பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார்கள்.
நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் அஜய். அதனால் தான் என்னவோ அவருக்கு கொஞ்சம் ஓவர் டோஸாக தெரிகிறது. கதை சிறப்பாகத்தான் உள்ளது, ஆனால் அதை சொல்ல வந்த திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளனர். படத்திற்கு பெரிய பலமே ஒளிப்பதிவு தான். அவ்வளவு அழகாக படமாக்கியிருக்கிறார் ஆசீம் பஜாஜ். படத்தொகுப்பையும், இசையையும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
படத்தின் முதல்பாதி மெதுவாக நகருகிறது, ஆனால் முதல்பாதியை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு பின்பாதியை விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் அஜய். அந்தவகையில் ஒரு இயக்குநராக அஜய்யை பாராட்டலாம். படத்தில் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ‛சிவாய் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
மொத்தத்தில், ‛சிவாய் - அஜய்க்கு கொஞ்சம் ஓவர் டோஸ்















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!