விமர்சனம்
ஐஸ்வர்யா ராஜேஷ் ., தன் தம்பியின் படிப்புக்காக பேயாக மிரட்டவில்லை ., கிட்டத்தட்டபேயாகவே வாழ்ந்திருக்கிறார் எனும் அளவிற்கு பிரமாதமாய் பயமுறுத்தியிருக்கிறார். வாவ்!
அறிமுக நாயகர் சுரேஷ் ரவி , அவரது நண்பர்களாக வரும் ரமேஷ் திலக் , ஐஸ்ஸின் மேக்கப்மேனாக வந்து பேயாகவும் மிரட்டும் முனிஷ் காந்த் எனும் ராமதாஸ் , கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் யோகி பாபு, தர்புகா சிவா , சாமியாராக வரும் சூப்பர் குட் சுப்பிரமணியம் , செல்வாவின் போட்டி ரியல் எஸ்டேட் அதிபர் மைம் கோபி , இவர்கள் எல்லோருக்கும் மேல் ரியல் எஸ்டேட் அதிபராக வரும்செல்வா உள்ளிட்ட எல்லோரும் பிரமாதமாய் நடித்திருக்கின்றனர்.
அதிலும் ,என் எட்டாம்அறிவுக்கு எட்டுன வரைக்கும் இங்க ஏதும் வில்லங்கம் இல்லை... என்றும் இந்த எலுமிச்சை பழத்தை ஆறடிக்கு குழி தோண்டி புதைச் சுடு ... என்றும் அசால்ட்டாய் சொல்லும் சாமியார் சூப்பர் குட் சுப்பிரமணியும் ,
அய்யய்யோ பழனியோட அண்ணா ல்லாம் கிடையாது பழனி நான் தான் ... ஏன்னா நான் ஒரு பார்ன் ஆர்ட்டிஸ்ட் எனும் யோகி பாபுவும் செம ஹாசம்.
சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசைகதைக்கேற்ற மிரட்டல் ., கே.விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும் அப்படியே ... இரண்டும் படத்திற்கு பெரும் பலம்.
புவன் ஆர்.நல்லானின் எழுத்து இயக்கத்தில்., பேய் வேடம் போட்டவர்களை நிஜ பேய் விரட்டும், மிரட்டும் காட்சிகள் செமரசனை ஒரு சில லாஜிக் குறைகளை மேஜிக்காய் கருத்தில் எடுத்துக் கொண்டோமென்றால் ., வழக்கமான பேய் படமாக இல்லாமல் காமெடியாகவும் , கலர்புல்லாகவும் மிரட்டியிருப்பதில் ஜெயித்திருக்கிறது மோ.
ஆக மொத்தமாத்தத்தில்., மோ படத்திற்கு போலாம் வா ... என யாரையும், யாரும் தாராளமாய அழைத்து போகலாம்!















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!