விமர்சனம்
மரத்தை சுற்றி டூயட் பாடும் பல நடிகர்களுக்கு மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான படங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இர்பான், ஹிந்தி மீடியம் படத்திலும் வித்தியாசமான ரோலில் நடித்து அசத்தியிருக்கிறார். தன்னால் எப்படிப்பட்ட ரோலையும் செய்ய முடியும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
பாகிஸ்தான் நடிகையான சபா ஓமரும், அழகான அம்மாவாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மகளாக வரும் சிறுமி பியா, தீபக் டாப்ரியால் உள்ளிட்டவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
ஹிந்தி மீடியம் படத்தை சாகேட் சவுத்ரி இயக்கியுள்ளார். பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் படும் பாட்டை அவ்வளவு அழகாக படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியை விட முதல்பாதி தான் விறுவிறுப்பாக நகருகிறது. அதற்கு படத்தின் திரைக்கதையும், வசனங்களும் பக்காவாக அமைந்துள்ளது. சச்சின் ஜிகாரின் பாடல்கள் இசை மற்றும் அமர் மோகிலின் பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கின்றன. இருந்தாலும் கிளைமாக்ஸ் மட்டும் தான் கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் படும் பாட்டை அவ்வளவு அழகாக, அசத்தலாக படமாக்கியதற்காகவே ஹிந்தி மீடியம் படத்தை ஒவ்வொரு குடும்பத்தினரும் தவறாது பார்க்கலாம்.
மொத்தத்தில், ஹிந்தி மீடியம் - பாடம்!
ரேட்டிங் - 3/5















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!