Advertisement

ரஜினியும்... காமெடியும்...

ரஜினியும்... காமெடியும்...

Advertisement

கனமான குணச்சித்திர கதாபாத்திரங்களையும், ஆக்ஷன் கதாபாத்திரங்களையும் அநாயசமாக செய்து வந்த ரஜினியை முதன்முதலாக நகைச்சுவை நாயகனாக காண்பித்து, அவருக்குள் இருக்கும் நகைச்சுவை நாயகனையும் வெளிக்காட்டியது இயக்குநர் கே பாலசந்தரே. இவரது "தில்லுமுல்லு" திரைப்படத்தில் தான் முதன்முதலாக முழுநீள நகைச்சுவை நாயகனாக நடித்திருந்து மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தார் ரஜினி.

 

அதன்பிறகு இவர் நடித்த பல ஆக்ஷன் படங்களிலும் இவருடைய நகைச்சுவை நடிப்பை அனைத்து இயக்குநர்களும் பயன்படுத்தலாயினர். இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் "தம்பிக்கு எந்த ஊரு". இத்திரைப்படம்தான் இவருடைய நகைச்சுவை நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. குறிப்பாக படத்தில் பாம்பு வரும் காட்சியில் இவருடைய நகைச்சுவை நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அந்த வரிசையில் "குரு சிஷ்யன்", "அண்ணாமலை" ஆகிய படங்களை உதாரணமாக கூறலாம். இவை தவிர தனது ஒவ்வொரு படங்களிலுமே தனக்கே உரிய ஸ்டைலில் காமெடி செய்து, காமெடி நடிகர்களையே ஓவர் டேக் செய்தார் என்றால் மிகையல்ல.

 

Advertisement