Advertisement

ரஜினியும்... ஆன்மிகமும்...

ரஜினியும்... ஆன்மிகமும்...

Advertisement

ரஜினிக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு வர காரணமாயிருந்த முதல் விஷயம், பெங்களுரில் அவர் படித்த ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பள்ளிக்கூடம் என்றே கூறலாம். இங்கேதான் இவருக்கு கடவுளைப் பற்றி தெளிவும், தியானத்தின் மகிமையும் தெரியவந்தது. தமிழ்நாட்டில் இன்று தீவிர பக்திப் பிரசாரம் மேற்கொள்ளும் கதாநாயகனாக ரஜினி நம் அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கின்றார்.

 

ரஜினியின் இந்த ஆன்மிக செயல்பாடுகள் அவருடைய ரசிகர்களையும் ஆன்மிகத்தை நோக்கி பயணப்பட வைத்தது. வெள்ளிக் கிழமைகளைவிட வியாழக்கிழமைகள் புனிதமாகத் தெரியவந்தது. வியாழக்கிழமைகளில் ஸ்ரீராகவேந்திரருக்கு ஒரு பொழுது உபவாசமும் இருக்க ஆரம்பித்தார்கள் அவருடைய ரசிகர்கள். ஒவ்வொரு வருடமும் இமயமலை சென்று, அங்கே தியானம் செய்து இறையருள் பெறுவதை வழக்கமாக வைத்திருப்பவர் ரஜினி.

 

இமயமலையில என்ன இருக்குன்னு சொன்னா... வெறும் பனி மலைகள்னு நினைக்கிறாங்க. அங்கே ஸ்பிரிச்சுவல் டிவைன், செயின்ட்ஸ், சாதூஸ், சித்தாஸ் இருக்காங்க. அங்கே போனாலே ஒரு வைப்ரேஷன் வரும். நமக்குத் தெரியாமலேயே எல்லா சிந்தனைகளும் மைன்டை விட்டுப் போய்விடும். இமயமலை எனக்கு பூஜை அறை மாதிரி. மைனஸ் டிகிரில கூட குகைக்கு உள்ளே சூடா இருக்கும். அதனால தியானம் பண்ண வசதியா இருக்கும். என்று கமல் ஒரு முறை இமயமலை பற்றி கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்திருந்தார் ரஜினி.

 

மேலும் தனது அரசியல் நிலைப்பாட்டில் கூட, ஆன்மிக அரசியலைத்தான் முன்மொழிந்திருக்கின்றார். உண்மையான, நேர்மையான, ஜாதி மத பேதமற்ற அரசியலே "ஆன்மிக அரசியல்" என்றும் விளக்கம் தந்திருக்கின்றார்.

 

Advertisement