Advertisement

என் வழி... அரசியல் வழி...

பயோகிராபி

Rajinikanth-profile

Advertisement

  • இயற்பெயர் - சிவாஜிராவ் கெயிக்வாட்
  • சினிமா பெயர் - ரஜினிகாந்த்
  • புனைப்பெயர் - சூப்பர் ஸ்டார்
  • பிறப்பு - 12-டிசம்பர்-1950
  • பிறந்த இடம் - பெங்களுரு - கர்நாடகா மாநிலம்
  • பணி - நடிகர், தயாரிப்பாளர்,
  • சினிமா அனுபவம் - 1975-லிருந்து
  • முதல் திரைப்படம் - அபூர்வ ராகங்கள்
  • துணைவி - லதா ரஜினிகாந்த்
  • குழந்தைகள் - ஐஸ்வர்யா, சௌந்தர்யா
  • பெற்றோர் - ராணோஜி ராவ் (தந்தை) - ராம்பாய் (தாய்)
  • உடன் பிறந்தவர்கள் - சத்யநாராயண ராவ், நாகேஸ்வர ராவ் (சகோதரர்கள்), அஸ்வத் பாலுபாய் (சகோதரி)

ரஜினியின் வாழ்க்கை பயணம்

Rajinikanth History

Advertisement

பள்ளி தந்த பக்தி

நடிகர் ரஜினிகாந்த் பால்ய பருவத்திலேயே தனது தாயை இழக்க நேரிட்டதால் தனது அண்ணன், அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவரது தந்தை ராணோஜி ராவ், கர்நாடக காவல்துறையில் காவலராக பணி புரிந்தவர். ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துப் பள்ளியான ஆச்சார்யா பாட சாலையில் தனது எஸ்.எஸ்.எல்.சி பள்ளிப் படிப்பை படித்து முடித்தார். அதுவரை இவர் உணராத பக்தி அனுபவங்களை இந்தப் பள்ளி இவருக்கு உணர்த்தியது என்றே சொல்ல வேண்டும். மாலைநேர பிரார்த்தனை, தியானம், பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சி எல்லாம் இங்கே தான் இவர் முதலில் கற்றுக் கொண்டார்.

 

தொழிலாளி ரஜினி

இயற்கையிலேயே முரட்டுத்தனமும், பிடிவாத குணமும் உள்ள ரஜினிக்கு இந்தப் பள்ளி, அவர் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை தந்தது. ஆபிஸ் ப்யூனாக தனது முதல் பணியை ஆரம்பித்த ரஜினி, மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், தச்சுப் பட்டறைத் தொழிலாளியாகவும் பணிபுரிந்திருக்கின்றார். பின் கர்நாடக போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டர் பணி. சிவாஜி நகர் சாமராஜ்பேட்டையை இணைக்கும் 134 எண் கொண்ட பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்தார். இவருக்குள்ளும் ஒரு நடிகர் இருக்கின்றார் என்பதை அறிந்து இவருக்கு அரிதாரம் பூசி நடிகராக்கியது இவருடைய நண்பர் ராஜ் பகதூர்.

 

 

சினிமாவிற்கு அடித்தளம் போட்ட நண்பர்

பொழுது போக்கிற்காக நாடகம் போடும் இவருக்கு அப்போதைய ரஜினியின் வேகமான நடை சுறுசுறுப்பு பிடித்துப் போக தனது "குருஷேத்திரம்" நாடகத்தில் துரியோதனன் வேடமேற்று நடிக்க வைத்தார். தொடர்ந்து சினிமாவிலும் ரஜினியை நடிக்க தூண்டியவரும் இவரே. அதன் விளைவு தமிழக அரசு திரைப்படக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். நேர்காணலுக்கு ரஜினியை வரச்சொல்லி கடிதம் வர, அதுவரை பார்த்துக் கொண்டிருந்த கண்டக்டர் பணிக்கு நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னை புறப்பட்டார்.

 

மேலும் »

Advertisement

விருதுகள்

2000ல் இந்திய அரசின் "பத்ம பூஷண் விருது"

2016ல் "பத்ம விபூஷண் விருது"

2019ல் "கோல்டன் ஜூப்ளி ஐகான் விருது"

1978ல் சிறந்த நடிகருக்கான "தமிழ்நாடு அரசு விருது" "முள்ளும் மலரும்" படத்திற்காக வழங்கப்பட்டது.

1982ல் சிறந்த நடிகருக்கான "தமிழ்நாடு அரசு விருது" "மூன்று முகம்" படத்திற்காக கிடைத்தது.

1999ல் சிறந்த நடிகருக்கான "தமிழ்நாடு அரசு விருது" "படையப்பா" படத்திற்காக

2005ல் ‛‛சந்திரமுகி’’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது.

2007ல் ‛‛சிவாஜி’’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது.

1984ல் தமிழக அரசின் "கலைமாமணி விருது" விருது

Advertisement

1989ல் "எம்.ஜி.ஆர் விருது"

1984ல் சிறந்த நடிகருக்கான "பிலிம் பேர் விருது", "நல்லவனுக்கு நல்லவன்" படத்திற்காக கிடைத்தது

2016ல் ஆந்திர அரசின் நந்தி விருது

1984ல் "நல்லவனுக்கு நல்லவன்" படத்திற்காக நடிகருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது".

1985ல் "ஸ்ரீராகவேந்திரர்" படத்திற்காக நடிகருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது".

1988ல் சிறந்த சாதனையாளருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது" "ப்ளட் ஸ்டோன்" படத்திற்காக

1991ல் "தளபதி" படத்திற்காக "சினிமா எக்ஸ்பிரஸ் விருது"

1992ல் "அண்ணாமலை" படத்திற்காக, "சினிமா எக்ஸ்பிரஸ் விருது"

1993ல் "வள்ளி" படத்திற்காக சிறந்த கதாசிரியருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது"

1995ல் "முத்து" படத்திற்காக, நடிகருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது"

ரஜினியும்... பஞ்ச்... டயலாக்கும்

நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனா கைவிட்டுறுவான் (பாட்ஷா)

நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி (பாட்ஷா)

rajini

நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன். (அண்ணாமலை)

இது எப்படி இருக்கு... (16 வயதினிலே)

கெட்ட பய சார் இந்த காளி (முள்ளும் மலரும்)

தீப்பெட்டிக்கு இரண்டு பக்கம் உரசினா தான் தீ பிடிக்கும், ஆனால் இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் சுரசினாலும் தீ பிடிக்கும் (மூன்று முகம்)

நான் சொல்றத தான் செய்வேன், செய்றத தான் சொல்வேன். (குரு சிஷ்யன்)

கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைச்சா என்னிக்கும் நிலைக்காது. (அண்ணாமலை)

எல்லாரும் எதிர்பார்க்கிறத நான் செய்யமாட்டேன். நான் செய்யப்போறது என்னன்னு யாரும் எதிர்பார்க்க விடவும் மாட்டேன். (உழைப்பாளி)

நேத்து ஒரு கூலி, இன்னிக்கு ஒரு நடிகன், நாளைக்கு...? (உழைப்பாளி)

கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு (பாபா)

நான் யோசிக்காம பேசமாட்டேன், பேசினதுக்கப்புறம் யோசிக்கமாட்டேன். (பாபா)

அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி. அசராம அடிக்கிறது இந்த பாபா பாலிசி. (பாபா)

நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் (முத்து)

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது. (முத்து)

ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான் (அருணாச்சலம்)

பேர கேட்டா சும்மா அதிருதுல்ல (சிவாஜி)

என் வழி தனி வழி (படையப்பா)

rajini

அதிகம் ஆசப்படுற ஆம்பளயும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்ல வாழ்ந்ததா சரித்திரம் இல்ல (படையப்பா)

கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாதான் வரும். (சிவாஜி)

பிளாக் ஷீப்... பிளாக் ஷீப்... மேஹஹஹஹ் (எந்திரன்)

தரமான சம்பவங்கள இனிமேல் தான் பார்க்கப்போற (பேட்ட)

போட்டோ

"ரஜினிகாந்த்" அவர்களின் போட்டோ தொகுப்புகள்

Advertisement

துளிகள்

"ரஜினிகாந்த்" பற்றிய தகவல்கள்

Left Quote சினிமாவிற்கு வருவதற்கு முன் ஆபீஸ் ப்யூனாக, மூட்டைத் தூக்கும் தொழிலாளியாக, தச்சுப் பட்டறைத் தொழிலாளியாக, பின்னர் கர்நாடகா போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராகப் பணிபுரிந்திருக்கின்றார். Right Quote

Left Quote சிவாஜி நகர், சாம்ராஜ்பேட்டையை இணைக்கும் 134 எண் கொண்ட பேருந்தில்தான் இவர் கண்டக்டராகப் பணிபுரிந்தார். Right Quote

Left Quote சிவாஜிராவ் என்ற மனிதருக்குள் ஒளிந்திருந்த நடிகரை முதன் முதலில் அடையாளம் கண்டது இவரது நண்பர் ராஜ் பகதூர். சினிமாவில் நடிக்கத் தூண்டியவரும் இவரே. Right Quote

Left Quote கே.பாலசந்தரின் "அபூர்வ ராகங்கள்" தான் ரஜினி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான முதல் படம். சிவாஜி ராவ் என்ற இவரது இயற்பெயர் ரஜினிகாந்த் என மாறியதும் இத்திரைப்படத்திலிருந்து தான். ஆகஸ்ட் 18, 1975ல் படம் வெளிவந்தது. Right Quote

Left Quote "பைரவி வீடு இதுதானா?", "நான் பைரவியின் புருஷன்" என்று தனது நண்பர் கமல்ஹாசனிடம் பேசிய வசனமே, ரஜினி திரைப்படத்தில் பேசிய முதல் வசனம். Right Quote

Left Quote ரஜினி கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம், கலைஞானம் கதை, தயாரிப்பில் எம்.பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த "பைரவி" திரைப்படம். வெளியான ஆண்டு 1978. Right Quote

Advertisement