
சாதனை படைத்த திரையுலக ராணிகள்
கே.ஆர். விஜயா
1970-களிலேயே சினிமா துறையில் சம்பாதித்து, சொந்தமாக "ஹெலிகாப்டர்" வாங்கிய முதல் இந்திய நடிகை என்ற அரிய சாதனையைச் செய்தவர். கதாநாயகியாக மட்டுமே 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பெருமைக்குரியவர்.
சாவித்திரி
நடிப்பில் உச்சம் தொட்டது மட்டுமின்றி, ஆண் ஆதிக்கம் நிறைந்த காலத்தில் சொந்த படங்களை இயக்கி, சொந்தமாகத் தயாரித்த துணிச்சலான நடிகை. அன்றைய காலத்தில் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையான சம்பளமும், திரைப்பட போஸ்டர்களில் ஹீரோக்களுக்கு சமமான முக்கியத்துவமும் பெற்றவர்.
ஜெயலலிதா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து, 100-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை அளித்த பிறகு, அரசியல் களத்தில் இறங்கி ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சாதனை படைத்தவர். எம்.ஜி.ஆருடன் இணைந்து 28 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, அதில் பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா கண்டது ஒரு முறியடிக்கப்படாத சாதனை.
மனோரமா
1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்ற ஒரே தென்னிந்திய நடிகை. தமிழ்நாட்டின் அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் ஆந்திராவின் என்.டி.ராமராவ் ஆகிய 6 முதலமைச்சர்களுடன் திரையில் இணைந்து நடித்த ஒரே நடிகை என்ற வரலாற்றுச் சாதனை படைத்தவர்.
ஸ்ரீதேவி
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரஜினி, கமல்ஹாசன் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக "Star Power" பெற்ற ஒரே நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து முன்னணி இந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து பாக்ஸ் ஆபிஸை ஆண்ட பெருமைக்குரிய நடிகை.
திரிஷா
வழக்கமாக தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் கதாநாயகி பயணம் 5 முதல் 10 ஆண்டுகளில் முடிந்துவிடும் என்ற பிம்பத்தை உடைத்தவர். 2000-களின் தொடக்கத்தில் அறிமுகமாகி, இப்பவும் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாகவே முதன்மைப் பாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் "Queen of South" ஆகத் திகழ்கிறார்.
நயன்தாரா
கதாநாயகன், பெரிய மாஸ் ஹீரோக்கள் இல்லாமல், தன் பெயரையே மூலதனமாக வைத்து திரைப்படங்களை வியாபாரம் செய்து, வசூலில் கோடிகளைக் குவிக்க முடியும் என நிரூபித்தவர். கதாநாயகர்களுக்கு இணையாக அதிக சம்பளம் (ரூ.10 முதல் 12 கோடி) வாங்கும் தென்னிந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றவர்.
அனுஷ்கா ஷெட்டி
பாகுபலி திரைப்படத் தொடரின் மூலம் உலகளவில் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்த படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த முதல் தென்னிந்திய நடிகை. அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி என வரலாற்றிலும், பேய் கதைகளிலும் நாயகர்களை விஞ்சும் அளவிற்கு ஓப்பனிங்கைத் தந்தவர்.
இவர்கள் வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், தங்கள் உழைப்பு, துணிச்சல் மற்றும் திறமையால் சினிமா வரலாற்றில் என்றும் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!