
யமுனா சின்னத்துரையின் டிரெயின் சீரிஸ் போட்டோஸ்
ஜூன் 27, 2022
சின்னத்திரை நடிகை யமுனா சின்னத்துரை "யாரடி நீ மோகினி" தொடரில் பேயாக நடித்திருந்தார். அதன் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் தற்போது பிரபலமாகி வருகிறார். முன்னதாகவே இவர் பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்திருந்தாலும் இப்போது தான் ஒரளவு ஃபார்முக்கு வந்துள்ளார். அந்த வகையில் இவரது இண்ஸ்டா புரொஃபைலும் இளைஞர்கள் பலரால் பின் தொடரப்பட்டு வருகிறது. யமுனாவும் சோஷியல் மீடியாவின் முக்கியத்துவம் உணர்ந்து சமீபகாலங்களில் போட்டோஷூட் ரீல்ஸ் என ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சென்னை மின்சார ரயிலை கான்செப்டாக வைத்து ஒரு போட்டோ சீரியஸை வெளியிட்டுள்ளார். யமுனாவின் அந்த புகைப்படங்கள் அலைபாயுதே ஷாலினியை நினைவுப்படுத்துவது போல் இருக்க, ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!