
பிக்பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு
இந்தப் புகாரின் அடிப்படையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முத்துக்குமரனுக்கு சம்மன் வழங்க, நேற்று விருகம்பாக்கத்தில் அவர் வசிக்கும் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மகளிர் போலீசார் சென்றனர்.
ஆனால், அங்கு அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் போலீசாரால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால், அவருக்கு சம்மன் வழங்க முடியாமல் போலீசார் திரும்பிச் சென்றனர். தலைமறைவாகி விட்ட முத்துக்குமரனை போலீசார் தேடி வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…