
முதியோர்களுக்காக இலவச ஆம்புலன்ஸ்! பாலாவின் செயலால் நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்
இந்நிலையில், தனக்கு சம்பளமாக கிடைக்கும் பணத்தில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் பாலா, குழந்தைகளின் படிப்பு, முதியோர்களின் பராமரிப்பு என ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்து வருகிறார். அந்த வரிசையில் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அவர் முதியோர் இல்லத்திற்காக புதிதாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த ஆம்புலன்ஸ் முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்களுக்கு பரிசோதனை நேரங்களில் பயன்படும் என்றும், தவிர முதியோர் இல்லத்தை சுற்றி இருக்கும் வயதானவர்களுக்கும் இலவசமாக சேவை வழங்கும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற பல நல்ல விஷயங்களில் ஈடுபடும் பாலாவின் குணத்தை பலரும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!