
திவ்யா ஸ்ரீதர் கள்ளத்தொடர்பில் இருந்தார்! ஆடியோ மற்றும் வாட்ஸ் ஆப் ஆதாரங்களை வெளியிட்ட அர்னவ்
இந்நிலையில், அண்மையில் அர்னவ் தன்னை போலவே பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும், தவிர ஒரு ஆணை காதலிப்பதாக ஏமாற்றி அவரது தற்கொலைக்கும் காரணமாக இருந்ததாகவும் அண்மையில் பேட்டியில் கூறியிருந்தார். அதற்கான ஆதாரங்களையும் திவ்யா வெளியிட்டுள்ளார். திவ்யாவின் இந்த குற்றசாட்டுக்கு பதிலளித்துள்ள அர்னவ், "முதல் கணவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே திவ்யா என்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்து என்னை ஏமாற்றினார். மேலும், என்னுடைய கேரியரை காலி செய்வதற்காக சீரியல் நடிகர் ஈஸ்வருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அவருடனும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன்" என்று பேட்டியளித்துள்ளார். மேலும், திவ்யா, அர்னவின் கேரியரை காலி செய்ய ஈஸ்வருடன் சேர்ந்து திட்டம் தீட்டுவது போல் வாட்ஸப் ஸ்கீரின்ஷாட்டையும் வெளியிட்டிருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!