
சீரியலை நிறுத்துங்க! திருச்செல்வதுக்கு கடிதம் எழுதிய ரியல் லைப் குணசேகரன்
இந்நிலையில், இந்த தொடரை நிறுத்த சொல்லி ஒரு ரசிகையின் கணவர் திருச்செல்வத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "எதிர்நீச்சல் சீரியலை உடனடியாக நிறுத்துங்கள். என்னுடைய மனைவி தினமும் உங்கள் சீரியலை பார்த்துவிட்டு என்னை குணசேகரனாகவும், அவளை ஜனனியாகவும் நினைத்து கொள்கிறாள். அவள் நடவடிக்கைகளும் மொத்தமாக மாறிவருகிறது" என்று குறிப்பிட்டுள்ளாராம். இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய திருச்செல்வத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அந்த பேட்டியில் "இதுபோன்ற கருத்துகள் வருவது சகஜம் தான். ஆனால், நான் சீரியலை நிறுத்தப்போவதில்லை" என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!