
எனக்கும் ரோஜா ஸ்ரீக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது! உண்மையை போட்டுடைத்த டீஜே ப்ளாக்
இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள டீஜே ப்ளாக், "என்னுடைய வேலை அந்த நிகழ்ச்சியில் யார் வந்தாலும் பாட்டு போடுவதுதான். அதுபோல தான் ரோஜா ஸ்ரீக்கும் அவர் பெயரிலேயே பாட்டு போட்டேன். அது ஓரளவுக்கு நிகழ்ச்சிக்கு செட்டானது. அதேசமயம் அது தொடர்பான நிகழ்வுகள் தொடர்ந்து தவறாக சென்று கொண்டிருக்கிறது. ரோஜா ஸ்ரீ முதலில் பேட்டி கொடுக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்த பேட்டிகளில் லவ், ரிலேஷன்ஷிப், ப்ரேக்-அப் என தம்ப்னைல் வைத்து வேறுமாதிரி மாற்றிவிட்டனர். உண்மையை சொன்னால், ரோஜா எனக்கு ஒரு ஹாய் கூட சொல்லியது கிடையாது. ஆனால், பேட்டிகளில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. எனக்கு வீட்டில் பெண் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க இந்த விஷயம் என்னுடைய குடும்பத்தில் மனஸ்தாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் நிகழ்ச்சிக்காக மட்டும் தான் அப்படி செய்தேனே தவிர எனக்கும் ரோஜா ஸ்ரீக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது" என கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!