
சீரியல் நடிகையின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது
அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் தமிழகத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவரை டில்லியில் வைத்து கைது செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பாக்யராஜ் விடுதலையானதாக தெரிய வருகிறது. இந்நிலையில், பிரவீனா மட்டுமில்லாமல் அவருடைய மகளின் புகைப்படங்களும் தற்போது ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பிரவீனா சைபர் கிரைமில் மீண்டும் புகார் அளித்ததன் பெயரில் விசாரணை செய்து குற்றவாளியான பாக்யராஜை மீண்டும் கைது செய்துள்ளனர். கைதான பாக்யராஜூக்கு 22 வயது தான் என்பதுடன் கல்லூரி மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!