
மகாலட்சுமிக்கு ஆதரவாக களமிறங்கிய காஜல் பசுபதி
இந்நிலையில் மகாலட்சுமி தற்போது ரவீந்தரை திருமணம் செய்ய காரணம் அவரிடம் இருக்கும் பணம் மட்டுமே என சிலர் தரைக்குறைவாக அவரை விமர்சித்து வருகின்றனர். மேலும், இவர்கள் திருமணத்தை கிண்டலடிப்பது போல் பல மீம்ஸ்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் மகாலட்சுமிக்கு ஆதரவாக காஜல் பசுபதி சோஷியல் மீடியாவில் பேசி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "அது எப்படிங்க, நயன்தாரா விக்னேஷ் சிவனை கட்டிக்கிட்டாலும் நயன்தாரா மேல தான் தப்பு. மகாலட்சுமி - ரவீந்தரை கட்டிக்கிட்டாலும் மகாலட்சுமி தான் தப்பு. என்ன ஒரு ஆம்பள புத்தில" என சமூகத்தின் மோசமான பார்வையை கேள்வி கேட்டு சூடு கொடுத்துள்ளார்.
காஜலை போலவே தற்போது பலரும் மகாலட்சுமி - ரவீந்தரின் வாழ்க்கை அவர்களது தனிப்பட்ட விருப்பம் அதில் தேவையற்ற கருத்துகளை கூற வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!