
தாய் - தந்தையின் பாசக் கதையில் தவமாய் தவமிருந்து - ஏப்.,18 முதல் ஜீ தமிழில் புத்தம் புதிய தொடர்
தங்களது நான்கு பிள்ளைகளான - ரேவதி, ராஜேந்திரன், ரவி மற்றும் மலர் ஆகியோரை வளர்த்து ஆளாக்க தங்கள் வாழ்க்கையை முழுவதையும் அர்ப்பணிக்கும் தம்பதியான மார்க்கண்டேயன் மற்றும் பார்வதி ஆகியோரது கதையே "தவமாய் தவமிருந்து". எல்லா பெற்றோர்களை போலவும் தங்களது குழந்தைகளுக்காக தன்னலமின்றி அனைத்தையும் அவர்கள் வழங்குகிறார்கள். ஆனால் மார்க்கண்டேயனின் பணி ஓய்விற்குப் பிறகு அவர்களது பிள்ளைகளால் கைவிடப்படுகிறார்கள். அந்த தம்பதியினர் அச்சமின்றி எப்படி தங்கள் சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள்; அவர்களின் இளைய மகள் அந்த பெற்றோருக்கு எப்படி நம்பிக்கை விளக்காக இருக்கிறாள். தன் பெற்றோரது வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயத்தை எப்படி அவள் வெற்றிகரமான ஒன்றாக மாற்ற உதவுகிறாள் என்பதே இதன் சுவாரஸ்யமான கதைக்களமாகும்.
மனதைத் தொடும் இந்த மார்க்கண்டேயன் மற்றும் பார்வதியின் உணர்வுபூர்ணமான கதையான "தவமாய் தவமிருந்து" தொடரை ஏப்ரல் 18 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஜீ தமிழில் கண்டு மகிழுங்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!